பெரும்பாக்கம் குடிசை மாற்றுவாரியம் விரைவில் சீரமைப்பு: அமைச்சர் உறுதி!

பெரும்பாக்கம் குடிசை மாற்றுவாரியம் விரைவில் சீரமைப்பு: அமைச்சர் உறுதி!
X

பொதுமக்களிடம்  இருந்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் மனுக்களை பெற்றார்.

பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு 6 மாதத்திற்குள் சீரமைக்கப்படும் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறினார்.

சென்னை சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட செங்கல்பட்டு மாவட்டம் மேடவாக்கம் அரசு பள்ளியில் கொரோனா சிறப்பு முகாம் திறப்பு விழா நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஊரக தொழில்துறை மற்றும் குடிசை பகுதி மாற்று வாரியத்துறை அமைச்சர் தாமோ.அன்பரசன், ரிப்பன் வெட்டி முகாமை தொடங்கி வைத்து பார்வையிட்டார். உடன் தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சோழிங்கநல்லூர் தொகுதி திமுக எம்எல்ஏ எஸ்.அரவிந்த் ரமேஷ், அரசு மருத்துவர்கள், குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் என ஏராமானோர் இருந்தனர்.

பின்னர் பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரிய எட்டு அடுக்கு குடியிருப்பு பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர் தா.மோ.அன்பரசன் துவக்கிவைத்து கொரோனா தடுப்பூசி உடலில் செலுத்திக்கொள்வது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வதை பார்வையிட்டார்.

இதை தொடர்ந்து செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாமை துவக்கிவைத்த அமைச்சர் தா.மோ.அன்பரசன் அப்பகுதி மக்களின் குறைகளை மனுக்களாக பெற்றுக்கொண்டார்.

பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் பல்வேறு அடிப்படை வசதிகள் இல்லைலென அப்பகுதி மக்கள் தங்கள் குறைகளை மனுவாக கொடுத்ததன் அடிப்படையில் உடனே குடிசை மாற்று வாரிய அதிகாரிகளுடன் திடீர் ஆய்வு மேற்கொண்டு அங்குள்ள மக்கள் பிரச்சனைகளை உடனடியாக சரி செய்ய உத்தரவிட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தா.மோ.அன்பரசன், பொதுமக்கள் கொரோனா தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தமிழக அரசு சார்பில் பொதுமக்களுக்கு தடுப்பூசி முகாமை இந்த பகுதியில் துவக்கிவைத்தோம்.

கடந்த ஆட்சியில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து தராமல் இருந்துள்ளனர். தற்பொழுது திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், திமுக எம்எல்ஏ எஸ்.அரவிந்த் ரமேஷ் இருவரும் இந்த பகுதி மக்கள் பல்வேறு அடிப்படை வசதிகள் இன்றி உள்ளதாக கூறினார்கள். அதன் அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம் கூறியுள்ளேன் என்று கூறினார்.

லிப்ட், தண்ணீர் பிரச்சனை, வீடுகள் சிதிலமடைந்துள்ளது போன்ற மக்கள் குறைகளை ஆய்வு செய்துள்ளேன். அதற்கான திட்டமதிப்பீடு தயார் செய்து 6 மாத காலத்திற்குள்ளாக முழுவதுமாக அந்த பணியை செய்து மக்கள் மகிழ்ச்சியோடு வாழ இந்த துறை செய்து தரும் என்றார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்