பெரும்பாக்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் ஆய்வு

பெரும்பாக்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் ஆய்வு
X

பெரும்பாக்கத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பார்வையிட்டார்.

பெரும்பாக்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பெரும்பாக்கம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். வடிகால்வாய் அமைத்து அடிப்படை வசதி செய்து தர முதல்வரிடம் வற்புறுத்துவதாக தெரிவித்தார்.

சென்னை பெரும்பாக்கம் எட்டடுக்கு குடியிருப்பில் சுமார் 20000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். வடகிழக்கு பருவ மழையின் காரணமாக பெய்த தொடர் கன மழையின் காரணமாக பகுதி முழுவதும் இடுப்பளவிற்கு மழை நீர் தேங்கி இயல்பு வாழ்க்கை முடங்கி போனது. தற்போது மழை நின்று விட்டதால் தேங்கிய மழை நீர் வடிந்து விட்ட நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அப்பகுதியில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கே.பாலகிருஷ்ணன் பேசுகையில் நகரத்தில் வாழ்ந்தவர்களை ஊராட்சியில் கொண்டு வந்து குடியிருக்க வைத்தது நாடு கடத்துவது போல் உள்ளதாகவும், அவர்களுக்கு போதுமான அடிப்படை வசதிகளான மருத்துவம், போக்குவரத்து, மழை நீர் செல்ல வடிகால்வாய்கள் அமைப்பது உள்ளிட்டவை குறுத்து முதல்வரிடம் வற்புறுத்தி கேட்க போவதாக கூறினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!