'கிரேன் சூடிய மாலை' : அதிமுக வேட்பாளருக்கு மெகா வரவேற்பு

கிரேன் சூடிய மாலை :  அதிமுக வேட்பாளருக்கு மெகா வரவேற்பு
X
செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதி வேட்பாளருக்கு கிரேன் மாலை வரவேற்பு அளிக்கப்பட்டது.

சென்னை புறநகர் மாவட்ட கழகம், சோளிங்கநல்லூர் சட்டமன்ற வேட்பாளர் கே.பி கந்தன் பள்ளிக்கரணையில் திறந்த வெளி ஜிப்பில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது வேட்பாளரை வரவேற்க தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட துணைச் செயலாளர் ப்ராமிஸ் அம்பேத்கர் 20அடி உயரமுள்ள ராட்ஷச மாலையை கிரேனில் தூக்கி வந்து கே.பி.கந்தனுக்கு அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் அதிமுக பெயர் பொறிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பலூன்களை மொத்தமாக பறக்கவிட்டார். பின்னர் வேட்பாளர் கந்தனுக்கு வீர வாள் ஒன்றை பரிசளித்தார்.

அதிமுக வெற்றி பெற துலுக்கானத்தம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. மேலும் பெண்கள் ஆரத்தி எடுத்து வேட்பாளரை வரவேற்றனர். அப்போது கே. பி.கந்தன் ஆங்காங்கு இருந்த பெண்களிடம் அதிமுகவுக்கு ஓட்டு போட வேண்டும். உங்களுக்கு அளித்த வாக்குறுதிப்படி அனைத்தும் நிறைவேற்றிக் கொடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்