வடியாத வெள்ளம் - விடியாத மக்களின் அவலம்: துரைப்பாக்கத்தில் பரிதாபம்

வடியாத வெள்ளம் - விடியாத மக்களின் அவலம்: துரைப்பாக்கத்தில் பரிதாபம்
X

துரைப்பாக்கத்தில், கெனால் ஒட்டிய பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது.

சென்னை பழைய மகாபலிபுரம் சாலை துரைப்பாக்கத்தில், மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பலத்த மழை பெய்து பல இடங்களும் வெள்ளக்காடாக மாறிவிட்டன. அவ்வகையில், பழைய மகாபலிபுரம் சாலை துரைப்பாக்கத்தில் கெனால் ஒட்டிய பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் சூழ்ந்துள்ளது.
இங்குள்ள பாண்டியன் நகர் முழுவதுமே, சுமார் 4 அடி வரை மழைநீர் தேங்கி உள்ளது. அருகில் உள்ள பக்கிங்ஹாம் கால்வாயில், நீர்வரத்து தடைப்பட்டிருப்பதால், இப்பகுதிகளில் மழைநீர் தேங்கும் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். பக்கிங்ஹாம் கால்வாயை முறையாக தூர்வாராததால் கால்வாயில் மழைநீர் செல்லாமல், தங்கள் வீடுகளை சூழ்ந்துள்ளதாகவும், உடமைகள் சேதமடைந்துள்ளதாகவும், அப்பகுதி மக்கள் வேதனையோடு குறிப்பிடுகின்றனர். பாதிக்கப்பட்டுள்ள தங்களுக்கு உடனடியாக நிவரணங்களை அரசு வழங்கிட வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Tags

Next Story
ai marketing future