சோழிங்கநல்லூர் சுனாமி குடியிருப்பில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

சோழிங்கநல்லூர் சுனாமி குடியிருப்பில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
X
சோழிங்கநல்லூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கேபி கந்தன் சுனாமி குடியிருப்பு பகுதியில் வாக்கு சேகரிப்பு

செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியில் அதிமுக சட்டமன்ற வேட்பாளர் கேபி கந்தன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு 200 ஆவது வட்டம் மகளிரணி சார்பில் மாலை அணிவித்தும் சந்தன மாலை அணிவித்தும் சிறப்பு வரவேற்பு அளித்தனர்.

கே.பி கந்தன் கூறுகையில், செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு எப்பொழுதுமே அம்மாவின் கோட்டை என்பதால், மகளிர் அனைவரும் இணைந்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் என்னை வெற்றி பெற வைப்பீர்கள் என்று நம்பிக்கை உள்ளது என்று கூறினார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்தன் மற்றும் செம்மஞ்சேரி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனா்

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்