சென்னை புறநகர் பகுதிகளில் வீட்டின் பூட்டை உடைத்து திருடி வந்த 4 பேர் கைது

சென்னை புறநகர் பகுதிகளில் வீட்டின் பூட்டை உடைத்து திருடி வந்த 4 பேர் கைது
X

பைல் படம்

சென்னை புறநகர் பகுதிகளில் வீட்டின் பூட்டை உடைத்து திருடி வந்த 4 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து நகைகளை மீட்டனர்.

சென்னை பெரும்பாக்கத்தில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது அங்கு சந்தேகத்திற்கிடமாக சுற்றித் திரிந்த நபர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவர்கள் பெரும்பாக்கம் காவல் நிலைய பழைய குற்றவாளிகள் என்பதும், கண்ணகி நகரைச் சேர்ந்த துரைராஜ்(25), தனுஷ் (எ) டாமல்(19), வீரமுத்து(19) மற்றும் நாகராஜ் (எ) நாகு(24) என தெரிய வந்தது.
இந்நிலையில் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போது பெரும்பாக்கம், ஊரப்பாக்கம் மற்றும் கூடுவாஞ்சேரி என சென்னையின் புறநகர் பகுதிகளில் பூட்டியிருக்கும் வீடுகளின் பூட்டை உடைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததும் போலீசாரின் விசாரணையில் தெரிவந்துள்ளது.
அவர்களிடமிருந்து பெரும்பாக்கம் காவல் நிலைய வழக்கில் செல்போன் மற்றும் ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி பகுதியில் திருடப்பட்ட 6 1/2 சவரன் தங்க நகை மற்றும் கேமரா ஒன்றையும் போலீசார் கைப்பற்றினர்.
பின்னர் 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த பெரும்பாக்கம் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
ai marketing future