விமானத்தில் கடத்தி கொண்டுவரப்பட்ட 2 கிலோ தங்கப்பசை பறிமுதல் : 2 பேர் கைது

விமானத்தில் கடத்தி கொண்டுவரப்பட்ட  2 கிலோ தங்கப்பசை பறிமுதல் : 2 பேர் கைது
X

சென்னை விமானநிலையம் ( பைல் படம்)

விமானத்தில் கடத்தி கொண்டு வரப்பட்ட 2 கிலோ தங்கப்பசையை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, 2 பயணிகளை கைது செய்தனர்.

இலங்கையிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி கொண்டுவரப்பட்ட ரூ.85.5 லட்சம் மதிப்புடைய 2 கிலோ தங்கப்பசை சென்னை விமானநிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டு, 2 பயணிகளை சுங்கத்துறை கைது செய்து விசாரணை .

இலங்கையிலிருந்து ஶ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் விமானம் நேற்று இரவு சென்னை சா்வதேச விமானநிலையத்திற்கு வந்தது.அதில் வந்த பயணிகளை விமானநிலைய சுங்கத்துறை அதிகாரிகள் கண்காணித்து,சந்தேகப்படும் பயணிகளை நிறுத்தி சோதனையிட்டனா்.

அப்போது சென்னையை சோ்ந்த 2 ஆண் பயணிகள்,தங்களிடம் சுங்கத்தீா்வை செலுத்தும் பொருட்கள் எதுவும் இல்லை என்று கூறிவிட்டு,கிரீன் சேனல் வழியாக வெளியே சென்றனா்.சுங்கத்துறையினருக்கு அவா்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து 2 பயணிகளையும் மீண்டும் உள்ளே அழைத்து வந்து சோதனையிட்டனா்.அப்போது அவா்களின் உள்ளாடைகளுக்குள் பிளாஸ்டிக் பாா்சல்கள் மறைத்து வைத்திருந்தனா்.அதை எடுத்து பிரித்து பாா்த்தபோது தங்கப்சை இருந்ததை கண்டுப்பிடித்தனா்.

2 பாா்சல்களிலும் 2 கிலோ தங்கப்பசை இருந்தது.அதன் மதிப்பு ரூ.85.5 லட்சம்.இதையடுத்து தங்கப்பசையை பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள்,கடத்தல் பயணிகள் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்துகின்றனா்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!