மாமல்லபுரத்தில் ஜி-20 மாநாடு: பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம்

மாமல்லபுரத்தில் ஜி-20 மாநாடு: பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம்
X

செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்


மாமல்லபுரத்தில் தொடங்க உள்ள ஜி-20 மாநாடு தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது.

ஜி-20 நாடுகள் அமைப்பில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ரஷ்யா, சீனா, ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, சவூதி அரேபியா, கனடா உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ளன. தற்போது இதன் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. அமைப்பின் வெவ்வேறு கருத்தியல் மாநாடுகள் இந்தியாவில் உள்ள முக்கிய பாரம்பரிய பகுதிகளில் நடத்தப்பட்டு வருகின்றன.

சென்னையில் மாநாடு கடந்த ஜனவரி 31, பிப்ரவரி 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் நடந்தது. புதுச்சேரியில் ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய நாட்களில் அறிவியல் மாநாடு நடந்தது. புதுடெல்லியில் உச்சிமாநாடு நடத்தப்படவுள்ளது.

இந்த நிலையில் மாமல்லபுரம், ரேடிசன் ரிசார்ட்டில் இன்று (வியாழக்கிழமை) நாளை ( வெள்ளிக்கிழமை) அமைப்பின் பெண்கள் பிரதிநிதிகளின் டபிள்யூ - 20 மாநாடு நடக்கிறது. 17-ம் தேதி (சனிக்கிழமை) காலை பெண் பிரதிநிதிகள் மாமல்லபுரம் சிற்பங்களை பார்வையிடுகின்றனர் அதே நட்சத்திர விடுதியில் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் தேதிகளில் மற்றொரு மாநாடு நடக்கிறது.

இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் பிரணீத் மாநாடு நாட்களில் விடுதி மற்றும் சுற்றுப்புற பகுதிகளின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாமல்லபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் ஜெகதீஸ்வரன், மாமல்லபுரம் காவல் கண்காணிப்பாளர் ருக்மாங்கதன் மற்றும் பிற பாதுகாப்பு அலுவலர்களுடன், மாமல்லபுரத்தில் ஜி20 மாநாடு நடக்க உள்ள நட்சத்திர ஓட்டலில் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து மாநாடு பிரதிநிதிகளை வருகிற 17ம் தேதி (சனிக்கிழமை) விடுதியில் இருந்து சிற்ப பகுதிகளுக்கு பாதுகாப்புடன் பஸ்களில் அழைத்து செல்ல சரியான வழித்தடம் குறித்து காவல்துறையினருடன் கடற்கரை கோவில் ஐந்து ரதம் உள்ளிட்ட இடங்களில் நேரில் சென்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு செய்தார்.

தொல்லியல் துறையினருடன் ஆலோசித்து சுற்றுலா வரும் பெண் பிரதிநிதிகளுக்கு புராதன சின்னங்களை சுற்றி பார்ப்பதற்கான ஏற்பாடுகள், சுற்றுலா வழிகாட்டிகள் அமைத்தல் உள்ளிட்டவை குறித்தும் ஆலோசித்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!