செங்கல்பட்டு தடுப்பூசி மையம் செயல்பட மத்திய அரசை வலியுறுத்தியுள்ளோம்: டி.ஆர் பாலு
சென்னை குரோம்பேட்டையில் கொரோனா தடுப்பு மையத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன், டி.ஆர்.பாலு எம்பி ஆகியோர் திறந்து வைத்தனர்.
சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் 100 ஆக்ஸிஜன் படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையத்தை ஊரகத்தொழில்துறை அமைச்சர் த.மோ.அன்பரசன் தலைமையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ம.சுப்பிரமணியம், டி.ஆர்.பாலு எம்பி ஆகியோர் திறந்து வைத்தனர்.
இதில், சுகாதாரதுறை செயலாளர் ராதாகிருஷ்ணன், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ், சட்டமன்ற உறுப்பினர்கள் கருணாநிதி, ராஜா மற்றும் மருத்துவர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர் பாலு எம்.பி, கொரோனா நோய்க்கான தடுப்பூசி வழங்கிட கூறி ரயில்வேதுறை அமைச்சர் பூயிஸ் கோயில், ரசாயன துறை அமைச்சர் மாண்டேவி மற்றும் சுகாதாரதுறை அமைச்சர் ஹர்ஸ்வர்தனையும் சந்தித்து வலியுறுத்தினோம். கொரோனாவை தடுக்க அதிகமான தடுப்பூசி வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளோம்.
மேலும், தமிழக அரசு சார்பில் கோரிக்கையாக செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி தயாரிக்கும் மத்திய அரசுக்கு சொந்தமான மையம் ஏறத்தாழ 700 கோடி செலவு செய்து கிடப்பில் போடப்பட்டது .
தற்போது கொரோனா நோய் தொற்று அதிக அளவில் பரவி வருவதால் மத்திய அரசிடம் தடுப்பூசி தயாரிக்கும் பணியை உடனடியாக தொடர வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஒரு வார காலத்தில் .இது குறித்து முடிவு தெரிவிக்கப்படும் என்று கூறினார்கள்.
ஆனால், இதுவரை எந்த தகவலும் இல்லை. தற்போது நிலைமை என்னவென்றால் நீதிமன்றமே தடுப்பூசிகளை மக்களுக்கும் வழங்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. தேர்ந்தெடுகக்பட்ட தலைவர்கள், முதல்வர்கள் வேண்டுகோள் நீராகரிக்கபட்டு வருகிறது. மத்திய அரசு மோசமான சூழ்நிலையில் முன்நின்று எந்தவித முயற்சியும் எடுக்காததற்கு இது எடுத்துகாட்டாக உள்ளது என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu