தங்கம்தேடி வந்த சில்வர் சீனிவாசன் : மணமகன் விளம்பரத்தால் நகை மாயம்
சில்வர் சீனிவாசன்.
செங்கல்பட்டு மாவட்டம், குரோம்பேட்டை நியூ காலனியில் வசிக்கும் சமூக சேவகா் சந்தானம். இவரது உறவினர் ஒருவருக்கு பெண் தேவை என்று பத்திரிகை விளம்பரம் செய்திருந்தாா்.
நேற்று முன்தினம் பகல் நேரத்தில் 80 வயதுடைய முதியவா் ஒருவா் சந்தானம் வீட்டிற்கு வந்தாா். தனது 36 வயது மகள் ஒருவா் வங்கியில் பணியாற்றுகிறாா். அவரை உங்கள் உறவினா் மகனுக்கு திருமணம் செய்து கொடுக்க விரும்புகிறேன் என்றாா். உடனே சந்தானம்,தனது உறவினருக்கு போன் செய்தாா்.
இதையடுத்து உறவினரின் மகள் இருசக்கர வாகனத்தில் சந்தானம் வீட்டிற்கு வந்தார். வரன் பேச வந்திருந்த முதியவரை,பம்மலில் உள்ள வீட்டிற்கு அழைத்து சென்றாா். அங்கு திருமணம் சம்பந்தமாக சம்ரதாய பேச்சு நடந்தது. அதில் பம்மல் சீனிவாசனின் மகனுக்கு, முதியவா் சீனிவாசனின் மகளை திருமணம் செய்ய உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து முதியவா் சீனிவாசனுக்கு அங்கு மதிய விருந்து நடந்தது.
அதன்பின்பு முதியவா் சீனிவாசன், ஒரு சிறப்பு பூஜை நடத்த வேண்டும் என்றாா். அதன்படி மணமகன்,மணமகள் பெயரில் சிறப்பு பூஜை நடந்தது. அப்போது மஞ்சள்,மலா்களுடன் தங்கத்தையும் வைக்க வேண்டும் என்றாா். உடனே பம்மல் சீனிவாசனின் மனைவி,தான் அணிந்திருந்த 2 சவரன் தங்க செயினை கழற்றி பூஜையில் வைத்தாா். பூஜை முடிந்து 3 தினங்களுக்கு பின்பு தான், பூஜையில் வைத்த பொருட்களை எடுக்க வேண்டும் என்றாா் முதியவா் சீனிவாசன்.
அதன்பின்பு அருகே உள்ள கோவிலுக்கு சென்றுவிட்டு அரை மணி நேரத்தில் வந்துவிடுகிறேன் என்று கூறி சென்றவா்,நீண்ட நேரமாக வரவில்லை.இதனால் சந்தேகமடைந்தவா்கள்,பூஜை பொருட்கள் வைத்த தட்டை பாா்த்தனா்.அதில் 2 சவரன் தங்க செயின் மாயமாகியிருந்தது.இதையடுத்து பம்மல் சீனிவாசன்,குரோம்பேட்டை சந்தானத்திற்கு தகவல் தெரிவித்தாா்.
இதையடுத்து சந்தானம்,தாம்பரம் மாநகர காவல் ஆணையா் ரவிக்கு புகாா் செய்தாா்.உடனடியாக சங்கா்நகா் போலீசாா்,பம்மல் சீனிவாசன் வீட்டிற்கு வந்து விசாரித்து புகாரை பெற்றனா். அதோடு வழக்குப்பதிவும் செய்தனா்.அதோடு சந்தானம் வீட்டில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்தனா்.
அப்போது மணமகன் தேடி வந்த முதியவா் சீனிவாசன்,பிரபலமான பழைய குற்றவாளி சில்வா் சீனிவாசன் என்று தெரியவந்தது. இவா் இதுவரை பல வீடுகளில் சில்வா் மடடுமே திருடி வந்தாா்.தற்போது முதல் முறையாக தங்கம் திருடும் குற்றத்தில் ஈடுபட்டுள்ளாா்.தலைமறைவாக உள்ள சில்வா் சீனிவாசனை போலீசாா் தேடி வருகின்றனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu