தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லி பயணம்

தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லி பயணம்
X

சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்ற தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்.

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.

டெல்லியில் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை நாளை 6ந் தேதி மதியம் 2 மணிக்கு சந்திக்கிறார். அப்போது மேகதாது அணை விவகாரம், மார்கண்டேய நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை விவகாரம் குறித்தும்,

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு நிரந்தர தலைவர், ஜூன், ஜூலை மாதத்திற்கு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய காவிரி நீர் நிலுவை குறித்தும் விவாதிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்காக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு அமைச்சர் துரைமுருகன் புறப்பட்டு சென்றார். முன்னதாக அவரிடம் செய்தியாளர்கள் டெல்லி பயணம் குறித்து கேட்ட போது டெல்லிக்கு சென்றுவிட்டு வந்தபின் பேசுகிறேன் என்றார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்