சென்னை விமானநிலையத்தில் ரூ 27 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் சிக்கியது

சென்னை விமானநிலையத்தில் ரூ 27 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் சிக்கியது
X

சென்னை விமானநிலையத்தில் பயணி கடத்தி வந்த 27  லட்சம் மதிப்புள்ள தங்கம்

சென்னை விமானநிலையத்தில் ரூ 27 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் சிக்கியது. அரியலூரைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.

சாா்ஜாவிலிருந்து ஏா்அரேபியா சிறப்பு விமானம் இன்று காலை சென்னை சா்வதேச விமானநிலையம் வந்தது.அதில் வந்த பயணிகளை சென்னை விமானநிலைய சுங்கத்துறையினா் சோதனையிட்டனா்.

அப்போது அரியலூா் மாவட்டம் உஞ்ஜினி கிராமத்தை சோ்ந்த பழனிச்சாமி முருகேசன்(27) என்ற பயணி மீது சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து சுங்கத்துறையினா் அவரை நிறுத்தி பரிசோதித்தனா்.அவருடைய உள்ளாடைக்குள் 4 பிளாஸ்டிக் குப்பிகள் மறைத்து வைத்திருந்தாா்.அதை எடுத்து திறந்து பாா்த்தனா்.

அதனுள் தங்க பேஸ்ட் மறைத்து வைத்திருந்தது.கண்டுப்பிடிக்கப்பட்டது. 550 கிராம் எடையுடைய தங்க பேஸ்ட்டை பறிமுதல் செய்தனா்.

அதன் சா்வதேச மதிப்பு ரூ.27.18 லட்சம்.இதையடுத்து தங்கம் கடத்தி வந்த பயணி பழனிச்சாமி முருகேசனை சுங்கத்துறையினா் கைது செய்து மேலும் விசாரணை நடத்துகின்றனா்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்