அரசு மருத்துவமனையில் மழை நீர் தேக்கம்: நோயாளிகள் வேறு இடத்திற்கு மாற்றம்

அரசு மருத்துவமனையில் மழை நீர் தேக்கம்: நோயாளிகள் வேறு இடத்திற்கு மாற்றம்
X

குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சுமார் இரண்டடிக்கு மழை நீர் தேங்கியதால் நோயாளிகள்  வேறு இடத்திற்கு மாற்றப்பட்டனர்.

குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் மழை நீர் தேங்கியதால் நோயாளிகள் வேறு இடத்துக்கு மாற்றம். ஆட்சியர், அமைச்சர் நேரில் ஆய்வு.

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழை காரணமாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சுமார் இரண்டடிக்கு மழை நீர் தேங்கியது. இதனால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

பின்னர் 15 கர்பினி பெண்கள் மற்றும் பிரசவம் முடிந்த பெண்கள் உட்பட மகப்பேறு பிரிவை சேர்ந்த 75 பெண்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மற்றும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனை அனுப்பி வைக்கபட்டனர்.

மேலும் பிற நோய்களுக்காக அனுமதிக்கபட்டுள்ள இருபதுக்கும் மேற்பட்ட நோயாளிகளும் இடம் மாற்றபட்டனர். இதனிடையே செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் மற்றும் ஊரக தொழில்துறை அமைச்சர் தாமோ.அன்பரசன் ஆகியோர் மருத்துவமனையில் நேரில் ஆய்வு செய்து நோயாளிகளுக்கு ஆறுதல் தெரிவித்ததோடு, நோயாளிகளை விரைந்து பாதுகாப்பான வேறு இடங்களுக்கு கொண்டு செல்லுமாறு அதிகாரிகளை வலியுறுத்தினார்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு