செங்கொடி நினைவு நாள்: உருவப்படத்துக்கு நாம் தமிழர் கட்சியினர் மலர்தூவி மரியாதை

செங்கொடி நினைவு நாள்: உருவப்படத்துக்கு நாம் தமிழர் கட்சியினர் மலர்தூவி மரியாதை
X

செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரத்தில் நாம்தமிழர்கட்சி சார்பில் நடைபெற்ற செங்கொடி நினைவுநாள்

தமிழர்களின் விடுதலைக்காக தன்னுயிரை நீத்த செங்கொடியின் 10 ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது

செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் நகர நாம்தமிழர் கட்சி சார்பில் நகரசெயலாளர் தென்றல்அரசு தலைமையில் பல்லாவரம் தர்காசாலையில் தமிழர்களின் விடுதலைக்காக தன்னுயிரை நீத்த செங்கொடியின் 10 ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக பல்லாவரம் கட்டிட தொழிலாளர் சங்கம் மற்றும் அமைப்பு சார தொழிலாளர் சங்கத்தின் மாநில தலைவர் ஆறுமுகம், கலந்து கொண்டு செங்கொடி உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். முன்னதாக, மறைந்த தலைவர்களுக்கு 2 நிமிடம் அஞ்சலி செலுத்தி உறுதிமொழி ஏற்பு மற்றும் மறைந்த தமிழச்சி செங்கொடிக்கு வீரவணக்கம் செலுத்தினர். இதில், நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் முருகன், துரைசிங்கம், சூர்யகுமார், பலராமன், ரிச்சட்சன், நந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai marketing future