/* */

டெல்லி சென்று வந்த அமைச்சர் துரைமுருகன் சென்னை விமானநிலையத்தில் பேட்டி

டெல்லி சென்று வந்த நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் விமானநிலையத்தில் பேட்டியளித்தார்.

HIGHLIGHTS

டெல்லி சென்று வந்த அமைச்சர் துரைமுருகன் சென்னை விமானநிலையத்தில் பேட்டி
X

அமைச்சர் துரைமுருகன் (பைல் படம்)

நிருபர்களிடம் கூறியதாவது:-

மேகதாதுவில் அணை கட்ட வேண்டும் என கர்நாடக அரசு முயற்சிக்கிறது. இது சட்டவிரோதமானது. உச்சநீதிமன்ற ஆணைக்கு புறம்பானது. மாநிலத்தில் ஒடும் நதி தனக்கே சொல்ல கூடாது என விதி இருக்கிறது. எல்லாவற்றையும் மீறி அணை கட்டுவோம் என சொல்கிறார்கள். அணை கட்டுவது தொடர்பாக அறிக்கை தயாரிக்க மத்திய நீர்வள கமிஷன் அனுமதி அளித்தது நியாயம் தான என கேட்டேன்.

அறிக்கை தயார் செய்ய அனுமதி தந்தாலே அணை கட்ட முடியாது. அதன் பிறகு பல அனுமதிகள் பெற வேண்டி உள்ளது. அறிக்கை தயாரிக்க அனுமதி தந்தால் அணை கட்டிவிடுவார்கள் என்று நினைக்க கூடாது. மத்திய அரசு பார்த்து கொண்டு இருக்காது என மத்திய அமைச்சர் தைரியமாக சொன்னார்.

மார்க்கண்டேய அணை கட்டுவது குறித்து உச்ச நீதிமன்றம் சென்ற போது நடுவர் மன்றம் அமைத்து கொள்ளுங்கள் என தெரிவித்தது. உடனே மத்திய அரசு ஒரு குழு அமைத்தது. அந்த குழுவும் நடுவர் மன்றம் தான் முடிவு செய்ய வேண்டும் என கூறிவிட்டது. 2 ஆண்டுகளாக நடுவர் மன்றம் அமைப்பதில் மத்திய அரசுக்கு என்ன தயக்கம் என்று கேட்டேன். உடனே நீர்வள துறை அதிகாரிகளிடம் நடுவர் மன்றத்தை அமைக்க வேண்டும் என்று கூறினார்.

பிரதமரை நேரில் சந்தித்து தமிழக முதலமைச்சர் பேசினார். கர்நாடக முதலமைச்சர் எழுதிய கடிதத்திற்கு தமிழக முதலமைச்சர் விரிவான கடிதம் எழுதினார்.

அதற்கும் கர்நாடக முதல்வர் கருத்து தெரிவித்திருப்பது வியப்பாக இருக்கிறது. நீண்ட காலம் அரசியலில் இருப்பவர். எங்கள் மதிப்புக்குரியவர் தான் எடியூரப்பா. ஆனால் கருத்தை தெரிவித்து இருப்பது வருத்தமளிக்கிறது.

கிருஷ்ணா நிதி நீர் விவகாரத்தில் பிரச்சனை இல்லை. தண்ணீர் கேட்டால் ஆந்திரா திறந்து விடுவார்கள்.

காவிரியில் இருந்து ஜுலை மாதம் 30 டி.எம்.சியுமும் ஜுன் மாதம் 19 டி.எம்.சி.யும் வந்து இருக்க வேண்டும். ஆனால் 2 மாதத்தில் தமிழகத்திற்கு 5.67 டி.எம்.சி. தான் கிடைத்து உள்ளது. இது பற்றி யாரிடமும் முறையீடுவது. மத்திய அமைச்சரிடம் சொல்லலாம். அல்லது காவேரி நதிநீர் மேலாண்மை ஆணையத்திடம் முறையீட வேண்டும்.

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு 3 மாதமாகியும் ஆணையத்திற்கு ஒரு தலைவர் போடப்பட வில்லை. ஆணையத்திற்கு தலைவர் நியமிப்பதில் என்ன தடை என மத்திய அமைச்சரிடம் கேட்டேன். நியாயத்தை உணர்ந்து உடனடியாக ஆணைய தலைவரை நியமிக்க உத்தரவிட்டு உள்ளார். நம் மாநிலத்தில் இருந்து யாரோ ஒருவர் மத்திய அமைச்சராக வந்தால் மகிழ்ச்சிக்குரியது தானே.

திட்டம் தயாரிக்க அனுமதி தந்துவிட்டாலும் அணை கட்ட முடியாது. கீழ் பகுதியில் உள்ள தமிழக ஒப்புதல் இல்லாமல் செய்ய முடியாது.

மத்திய நீர்வளத்துறை அமைச்சர் பிரச்சனைகளை புரிந்து வைத்து விரிவாக பேசினார். அவருடனான சந்திப்பு மகிழ்ச்சிகரமானது. முதலமைச்சர் அறிவுறுத்தலின் பேரில் பயணத்தை மேற்கொண்டேன். முல்லை-பெரியாறு அணையில் உச்சநீதிமன்றம் பேபி அணைஅணை கட்டினால் 152 அடி வரை தண்ணீரை நிறுத்தலாம் என்றது. பேபி அணை கட்ட சென்றால் 15 மரங்கள் இருக்கிறது. அந்த மரங்களை அகற்ற கேரள அரசு அனுமதிக்கவில்லை. சாலையை போடவும் விடவில்லை. இது பற்றி கேட்டோம். இது பற்றி கேரளா அரசுடன் பேசுவதாக தெரிவித்தார்.

கோதாவரி-குண்டாறு அணை இணைப்புக்கு திட்ட அறிக்கை தயாரித்து கையில் வைத்து உள்ளீர்கள். கோதாவரியில் இருந்து கிருஷ்ணா, கிருஷ்ணாவில் இருந்து பென்னாறு, பென்னாறில் இருந்து பாலாறு, பாலாற்றில் இருந்து காவிரி, காவிரியில் இருந்து குண்டாறு என பல கட்டங்கள் உள்ளது. இதில் காவிரியில் இருந்து குண்டாறு வரை பணிகளை தமிழக அரசு செய்து வருகிறது. அதற்கான நிதியை தர வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தேன். இவ்வாறு அவர் கூறினார்.

Updated On: 7 July 2021 3:51 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: ரசவாதி படத்தின் இசை வெளியீட்டு விழா | Arjun Das | Tanya...
  2. லைஃப்ஸ்டைல்
    'அன்பு' வாழும் 'இல்லம்', கூட்டுக்குடும்பம்..!
  3. வீடியோ
    🔴LIVE :சவுக்கு சங்கர் மேல் கஞ்சா வழக்கில் கைது | பொங்கி எழுந்த சீமான்...
  4. சேலம்
    மரத்தில் இருந்து தவறி விழுந்து மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல்...
  5. லைஃப்ஸ்டைல்
    மரணம், இயற்கையின் நீள்துயில்..!
  6. நாமக்கல்
    நாமக்கல் டிரினிடி மெட்ரிக் மேல்நிலை பள்ளி, பிளஸ் 2 தேர்வில் சாதனை..!
  7. கோவை மாநகர்
    சுற்றுலா இடங்களில் மதுவுக்கு தடை விதிக்க வேண்டும் : வானதி சீனிவாசன்...
  8. ஈரோடு
    அந்தியூர் அருகே தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த காட்டு யானை..!
  9. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே தனியார் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து
  10. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை எனும் கவசம் அணியுங்கள்..! வாழ்க்கை வெற்றியாக அமையும்..!