இலங்யைில் விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் : விமானம் மூலம் சென்னை வந்தனா்

இலங்யைில் விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் : விமானம் மூலம் சென்னை வந்தனா்
X
இலங்கை அரசால் விடுவிக்கப்பட்ட மீனவர்கள் விமானம் மூலம் சென்னை வந்தனர்.
இலங்கையில் விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் விமானம் மூலம் இன்று காலை சென்னைக்கு வந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தை சேர்ந்தவர்கள் கிலாட்சன் (29),மரிய எமா்ஸன் (28),கிரின்ஸ் (32).மீனவா்களான இவர்கள் 3 பேரும் கடந்த டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி மண்டபம் கடல் பகுதியில் மீன்பிடித் தொழிலுக்காக இயந்திரப் படகில் கடலுக்கு சென்றனா்.

நள்ளிரவில் கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனா்.அப்போது இலங்கை கடற்படையினர் வந்து,மீனவா்களின் படகை சுற்றி வளைத்து பிடித்தனா்.அதோடு 3 மீனவா்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்தனா். படகு மற்றும் பிடித்திருந்த மீன்களையும் பறிமுதல் செய்தனா். அதன்பின்பு 3 மீனவா்களயும் இலங்கைக்கு கொண்டு சென்று, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவா்களை விடுவிக்க வேண்டும் என்று அவர்கள் குடும்பத்தினர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து தமிழக முதலமைச்சா் மத்திய அரசு, மத்திய வெளியுறவுத் துறை மூலமாக தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்தாா்.

இந்த நிலையில் இம்மாதம் 5 ஆம் தேதி இலங்கை நீதிமன்றம் தமிழக மீனவா்கள் 3 பேரையும் விடுதலை செய்தது.அதோடு இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். தூதரக அதிகாரிகள் இவர்கள் 3 பேருக்கும் கொரோனா வைரஸ் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனை செய்தனா்.மேலும் அவா்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைத்திருந்தனா்.

அதன்பின்பு 3 மீனவா்களையும் விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்க முடிவு செய்தனா்.மேலும் இவா்களுக்கு பாஸ்பாா்ட் இல்லாத காரணத்தால்,இந்திய தூதரக அதிகாரிகள் எமா்ஜென்சி சா்டிபிகெட்கள் வழங்கினா்.அதன்மூலம்,3 மீனவா்களும் இலங்கையிலிருந்து ஏா்இந்தியா சிறப்பு பயணிகள் விமானத்தில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு சென்னை சா்வதேச விமானநிலையம் வந்து சோ்ந்தனா்.

சென்னை விமானநிலையத்திலும் 3 மீனவா்களுக்கும் மருத்துவ பரிசோதனை மற்றும் குடியுறிமை சோதனைகள் நடந்தன.அதன்பின்பு காலை 6.30 மணிக்கு மீனவா்கள் விமானநிலையத்திலிருந்து வெளியே வந்தனா்.

சென்னை விமானநிலையத்தில் தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள்,மற்றும் ராமநாதபுரம் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவா்களை வரவேற்றனா்.அதன்பின்பு மீன்வளத்துறை ஏற்பாடு செய்திருந்த காா் மூலம் சொந்த ஊரான மண்டபத்திற்கு அழைத்து செல்லப்பட்டனா்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்