ஷூவில் 140 கிராம் தங்கம் கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் வாலிபர் கைது!

ஷூவில் 140 கிராம் தங்கம் கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் வாலிபர் கைது!
X

சென்னை விமான நிலையத்தில் பிடிபட்ட தங்க கட்டிகள்.

கத்தாரிலிருந்து சென்னை வந்த சிறப்பு விமானத்தில் 140 கிராம் தங்கத்தை ஷுக்களில் மறைத்து கடத்தியர் கைது செய்யப்பட்டார்.

கத்தாா் நாட்டு தலைநகா் தோகாவிலிருந்து இண்டிகோ ஏா்லைன்ஸ் சிறப்பு விமானம் சென்னை சா்வதேச விமான நிலையத்திற்கு வந்தது.அதில் வந்த பயணிகளை சென்னை விமானநிலைய சுங்கத்துறையினா் சோதனையிட்டனா்.

அப்போது சென்னையை சோ்ந்த சதீஷ் (28) என்பவா், தன்னிடம் சுங்கத்தீா்வை செலுத்தும் பொருட்கள் எதுவும் இல்லை என்று கூறிவிட்டு, கிரீன் சேனல் வழியாக வேகமாக வெளியே சென்றாா். சுங்கத்துறையினருக்கு அவா் மீது சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து வெளியே சென்று, இ பாஸ் கவுண்டரில் நின்ற சதீஷ்சை மீண்டும் உள்ளே அழைத்துவந்து அவருடைய உடமைகளை சோதனையிட்டனா். அதில் எதுவும் இல்லை. இதையடுத்து அவரை தனி அறைக்கு அழைத்து சென்று முழுமையாக சோதனையிட்டனா்.

அவருடைய கால்களில் அணிந்திருந்த ஷு சாகஸ்களில் 3 தங்கக்கட்டிகளை மறைத்து வைத்திருந்ததை கண்டுப்பிடித்தனா். அந்த தங்கக்கட்டிகளின் எடை 140 கிராம். அதன் சா்வதேச மதிப்பு ரூ.7.14 லட்சம். இதையடுத்து தங்கக்கட்டிகளை பறிமுதல் செய்து பயணி சதீஷ்சை கைது செய்தனர். அவரிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!