பல்லாவத்தில் பிறந்தநாளன்று லாரி ஓட்டுனர் கொலை: 3 பேர் கைது

பல்லாவத்தில்  பிறந்தநாளன்று லாரி ஓட்டுனர் கொலை: 3 பேர் கைது
X

பல்லாவரம் அருகே கொலை செய்யப்பட்ட லாரி ஓட்டுனர் தேவேந்திரன்

பல்லாவரத்தில் பிறந்தநாளன்று லாரி ஓட்டுனர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

பம்மல் அருகே முன் விரோதம் காரணமாக பிறந்தநாளன்று லாரி ஓட்டுனர் கத்தியால் குத்தி கொலை சம்பவம் தொடர்பாக கொலையாளி உட்பட சகோதரர்கள் இரண்டு பேரை போலிசார் கைது செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் பம்மல் அடுத்த அனகாபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் லாரி ஓட்டுனர் தேவேந்திரன் (40) நேற்று இரவு வீட்டில் தனது பிறந்தநாளை கொண்டாடி கொண்டிருந்தார். அப்போது வெளியே சிலர் கேளி கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது .

இதனால் ஆத்திரம் அடைந்த தேவேந்திரன் வெளியே சென்று பார்த்த போது வேன் ஓட்டுனரான மோகன்ராஜ்(36) , சகோதரர்கள் பிரபு ,மோகலிங்கம் ஆகியோர் அளவுக்கு அதிகமான மது போதையில் இருந்து உள்ளனர்.

இதனால் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்கு வாதத்தில் மோகன்ராஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக தேவேந்திரனை குத்திவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பிசென்றுள்ளனர்.

தகவல் அறிந்து வந்த போலிசார், தேவேந்திரனை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

மேலும் முட்புதரில் ஒளிந்து கொண்டிருந்த மோகன்ராஜ் மற்றும் சகோதரர்களை மடக்கி பிடித்து கைது செய்த போலிசார் விசாரித்த்தில் வீட்டின் அருகே வாகனத்தை நிறுத்துவது குறித்து ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளதாக ஒப்புகொண்டனர். இதனையடுத்து வழக்கு பதிவு விசாணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!