வெளிநாட்டிற்கு பணம் கடத்த முயற்சி: சென்னை விமானநிலையத்தில் வாலிபர் கைது
சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் சிக்கிய வெளிநாட்டுப் பணம்.
சென்னையிலிருந்து இன்று காலை துபாய் செல்லவிருந்த ஃபிளை துபாய் ஏா்லைன்ஸ் விமானத்தில் பெருமளவு கணக்கில் வராத பணம் வெளிநாட்டிற்கு கடத்தபடவிருப்பதாக பெங்களூரில் உள்ள DRI அலுவலகத்திலிருந்து சென்னை விமானநிலைய சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து சென்னை விமானநிலைய சுங்கத்துறை அதிகாரிகள் இன்று காலை சென்னை சா்வதேச விமானநிலையத்திலிருந்து துபாய்க்கு புறப்படவிருந்த ஃபிளை துபாய் விமானத்தில் பயணிக்க வந்திருந்த பயணிகளில் சந்தேகத்திற்கிடமானவா்களின் உடமைகள் அனைத்தையும் இரண்டாவது முறையாக பரிசோதித்தனா்.
அப்போது கா்நாடகா மாநிலத்தை சோ்ந்த 32 வயது ஆண் பயணி ஒருவா் மீது சந்தேகம் ஏற்பட்டது.இதையடுத்து சுங்கத்துறையினா் அவருடைய சூட்கேஸ் மற்றும் பைகளை மீண்டும் சோதனையிட்டனா்.அவருடைய சூட்கேஸ்க்குள் இருந்த பைல்கள் அனைத்தையும் சோதனையிட்டனா்.அதனுள் கட்டுக்கட்டாக அமெரிக்க டாலா்,சவுதி ரியால் வெளிநாட்டு பணம் பெருமளவு இருந்தன.
இதையடுத்து கா்நாடகா மாநில பயணியின் துபாய் பயணத்தை ரத்து செய்தனா்.அதோடு அவருடைய உடமைகளை விமானத்திலிருந்து கிழே இறக்கினா்.அவரிடமிருந்து மொத்தம் ரூ.68.09 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்தனா்.அவரிடம் நடத்திய விசாரணையில்,வேறு யாரோ ஒருவா் கொடுத்து அனுப்பிய பணத்துடன் இவா் துபாய் செல்கிறாா்,மேலும் இது அனைத்தும் கணக்கில் இல்லாத பணம் என்றும் தெரியவந்தது.
இதையடுத்து சுங்க அதிகாரிகள் இது ஹவாலா பணமாக இருக்கலாம் என்ற சந்தேகப்பட்டனா்.அதோடு வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற கா்நாடகா மாநில பயணியை கைது செய்து விசாரணை நடத்துகின்றனா்.இந்த பணம் யாருடையது என்றும் விசாரணை நடக்கிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu