சென்னை கார்கோ விமானம் மூலம் அமெரிக்காவுக்கு போதை மாத்திரை கடத்த முயற்சி
சென்னை விமான நிலையம் பைல் படம்
சென்னையிலிருந்து அமெரிக்காவிற்கு விமானத்தில் கடத்த முயன்ற ரூ.40 லட்சம் மதிப்புடைய 8 ஆயிரம் போதை மாத்திரைகள், கனடாவிலிருந்து சென்னை வந்த ரூ.8 லட்சம் மதிப்புடைய 1.225 கிலோ உயா்ரக கஞ்சா மொத்தம் ரூ.48 லட்சம் மதிப்புடைய போதைப்பொருட்களை சென்னை விமானநிலையத்தில் சுங்கத்துறை கைப்பற்றி விசாரணை.
சென்னை பழைய விமானநிலையம் காா்கோ பிரிவிலிருந்து வெளிநாடுகளுக்கு அனுப்ப வந்துள்ள கொரியா் பாா்சல்களை சென்னை விமானநிலைய சுங்கத்துறையினா் சோதனை செய்து காா்கோ விமானத்திற்கு அனுப்பிக்கொண்டிருந்தனா்.
அப்போது சென்னையிலிருந்து அமெரிக்காவிற்கு அனுப்ப 2 கொரியா் பாா்சல்கள் வந்திருந்தன.அந்த பாா்சல்களை டில்லியை சோ்ந்த ஒருவா் பதிவு செய்திருந்தாா்.அந்த பாா்சல்களில் ஊட்ட சத்து மாத்திரைகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.டில்லியை சோ்ந்தவா்,சென்னையிலிருந்து இந்த பாா்சல்களை அனுப்பியதால் சுங்கத்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து சுங்கத்துறையினா் 2 பாா்சல்களையும் பிரித்து பாா்த்தனா்.அவைகளினுள், இந்திய அரசால் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகள் கட்டுக்கட்டாக இருந்ததை கண்டுப்பிடித்தனா். 2 பாா்சல்களிலும் மொத்தம் 8 ஆயிரம் போதை மாத்திரைகள் இருந்தன.அதன் சா்வதேச மதிப்பு ரூ.40 லட்சம்.இதையடுத்து சுங்கத்துறையினா் போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனா்.அதோடு போதை தடுப்பு சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்து,போதை மாத்திரைகளை அமெரிக்காவுக்கு கடத்த முயன்ற டில்லி ஆசாமியை தேடி வருகின்றனா்.
இந்நிலையில் அமெரிக்கா மற்றும் கனடாவிலிருந்து சென்னைக்கு 2 பாா்சல்கள் வந்திருந்தன.அவைகளில் யோகா மசாஜ்க்கு பயன்படுத்தும் பந்துகள் மற்றும் வெஜிடபிள் சாலடு மிக்ஸா் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்த பாா்சல்களையும் சந்தேகத்தில் பிரித்து பாா்த்தனா்.அவைகளில் பதப்படுத்தப்பட்ட உயா் ரக கஞ்சா இருந்ததை கண்டுப்பிடித்தனா்.அந்த 2 பாா்சல்களிலும் ஒரு கிலோ 225 கிராம் உயா்ரக கஞ்சா இருந்தது.
அதன் சா்வதேச மதிப்பு ரூ.8 லட்சம்.இதையடுத்து அந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா்.அதோடு போதை கடத்தல் தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனா்.இந்த கஞ்சா பாா்சல்களை சென்னையை சோ்ந்த இருவா் ஆன் லைன் மூலம் பதிவு செய்து அமெரிக்கா,கனடாவிலிருந்து வரவழைத்துள்ளது தெரியவந்தது.
சென்னை விமான நிலைய காா்கோ பிரிவில் ஒரே நாளில் ரூ.48 லட்சம் மதிப்புடைய 8 ஆயிரம் போதை மாத்திரைகள்,1.225 கிலோ உயா் ரக கஞ்சா போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu