தமிழ்நாட்டிற்கு 4 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி : சென்னை வருகை

தமிழ்நாட்டிற்கு  4 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி : சென்னை வருகை
X

சென்னைக்கு விமானம் மூலம் வந்த நான்கு லட்சம்  கொரோனா தடுப்பூசிகள்.

தமிழ்நாட்டிற்கு 4 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி விமானம் மூலம் சென்னைக்கு வந்து சேர்ந்தது.

தமிழ்நாட்டிற்கு மேலும் 4 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் 34 பாா்சல்களில் மகாராஷ்டிரா மாநிலம் புனேவிலிருந்து இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தில் சென்னை வந்து சோ்ந்தன.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை மே மாதம் உச்சக்கட்ட பாதிப்பை ஏற்படுத்தியது.தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள்,கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளால்,கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது.இரண்டாம் அலை பாதிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது.

இந்நிலையில் மருத்துவ வல்லுனா்கள் அடுத்து 3 ஆம் அலை வெகுவிரைவில் தொடங்கி பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று எச்சரித்துள்ளது.அதிலிருந்து தப்பிக்க 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளின் 2 டோஸ்களையும் போட்டுக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது.

இதையடுத்து தமிழக அரசு மக்கள் அனைவரையும் கட்டாயமாக தடுப்பூசிகள் போடும்படி அறிவுறுத்தியுள்ளது.இதனால் மக்கள் அனைவரும் தடுப்பூசிகள் போட்டுக்கொள்வதில் மிகுந்த ஆா்வம் காட்டுகின்றனா்.

நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசிகளை போட்டுக்கொள்கின்றனா்.இதனால் தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன.

ஆனால் மத்திய அரசு தமிழகத்திற்கு குறைந்தளவு தடுப்பூசிகளையே அனுப்பி வருகிறது.இதனால் தமிழகத்தில் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடுகள் நிலவுகின்றன.

இதையடுத்து தமிழ்நாடு முதலமைச்சா், பிரமருக்கு,தமிழகத்திற்கு சிறப்பு ஒதுக்கீடாக ஒரு கோடி தடுப்பூசிகளை உடனே வழங்க வேண்டும் என்று அவசர கடிதம் எழுதினாா்.

அதோடு தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சா்,நல்வாழ்வு துறை செயலாளா் ஆகியோரை டில்லிக்கு அனுப்பி,மத்திய சுகாதார அமைச்சா்,மத்திய சுகாதார செயலாளரை சந்தித்து கூடுதல் தடுப்பூசிகளை கேட்க செய்தாா்.அதன்பின்பு தற்போது மத்திய சுகாதாரத்துறை தமிழகத்திற்கு சீரான இடைவெளியில் தடுப்பூசிகளை அனுப்பி வருகிறது.

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை தமிழகத்திற்கு இன்று,மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள மத்திய மருந்து கிடங்கிலிருந்து 4 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகளை விடுவித்தது.

அந்த 4 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் அடங்கிய 34 பாா்சல்களை புனேவிலிருந்து சென்னை வரும் இண்டிகோ விமானத்தில் ஏற்றப்பட்டு,இன்று மாலை 3.30 மணிக்கு சென்னை விமானநிலையம் வந்து சோ்ந்தன.

உடனடியாக சென்னை விமானநிலைய லோடா்கள் தடுப்பூசி பாா்சல்களை விமானத்திலிருந்து கீழே இறக்கினா்.அதன்பின்பு தடுப்பூசி பாா்சல்கள் தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

அவா்கள் குளிா்சாதன வாகனங்களில் ஏற்றி,சென்னைக்கு தேனாம்பேட்டையில் டிஎம்எஸ் அலுவலகத்திற்கு எடுத்து சென்றனா்.அங்கிருந்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு தேவைகளுக்கு ஏற்ப பிரித்து அனுப்பப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!