அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க கோரி கிராம மக்கள் முற்றுகை

அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க கோரி கிராம மக்கள் முற்றுகை
X
அரசு நெல்கொள்முதல் நிலையம் அமைக்க கோரி மதுராந்தகம் ஆர்டிஓ அலுவலகத்தை 50 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் முற்றுகையிட்டனர்

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டத்திற்க்குட்பட்ட சிறுமயிலூர் கிராமத்தில் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்தது. இந்த அரசு நெல் கொள்முதல் நிலையம் மீண்டும் இக்கிராமத்திற்க்கு கேட்டு மாவட்ட வேளாண்மைதுறையில் கோரிக்கை வைத்திருந்தனர்.

ஆனால் இதுவரை அதிகாரிகளிடம் கேட்டால் உரிய பதில் அளிக்கப்படாததால் மதுராந்தகம் வருவாய் கோட்டாச்சியரிடம் மனு அளிக்கப்பட்டு அலுவலகம் எதிரே 50 க்கும் மேற்பட்ட சிறுமைலூர் கிராம மக்கள் முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்க்கு வந்த மதுராந்தகம் காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி அதன்பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாக உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

Tags

Next Story
மல்லசமுத்திரத்தில் கொப்பரை வர்த்தகம்: விவசாயிகள் சந்தித்த நன்மைகள்