என்னது? ஒரு கிலோ தக்காளி கொடுத்தால் ஒரு பிரியாணி இலவசமா?

என்னது?  ஒரு கிலோ தக்காளி கொடுத்தால் ஒரு பிரியாணி இலவசமா?
X

தக்காளிக்கு பிரியாணி தரும் பிரியாணி கடை]

மேல்மருவத்தூா் அருகே ஒரு பிரியாணி கடையில் இரண்டு பிரியாணிக்கு அரை கிலோ தக்காளி இலவசம், ஒரு கிலோ தக்காளி கொடுத்தால் ஒரு பிரியாணி இலவசம்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள சோத்துப்பாக்கத்தில் இயங்கிவரும் தனியாா் பிரியாணி கடையில் இன்று அதிரடி ஆஃபர் அறிவித்து விற்பனை செய்யப்படுகிறது.

முழு சிக்கன் பிரியாணி இரண்டு வாங்கினால் அரை கிலோ தக்காளி இலவசம். வாடிக்கையாளா், பணத்திற்கு பதிலாக, ஒரு கிலோ தக்காளியை கொடுத்தால், ஒரு சிக்கன் பிரியாணி இலவசம். இது போன்ற சலுகைகளை அறிவித்து விற்பனை செய்து வருகின்றனா். இது இன்று ஒரு நாள் மட்டுமே விற்பனை என்று அறிவித்து உள்ளது.

இயற்கை சீற்றத்தால் அழிந்து வரும் விவசாயத்தையும் ஊக்கப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த ஆஃபர் வழங்கப்படுகிறது என்று கூறுகின்றனா். இப்போது தக்காளி விலை பெட்ரோல் டீசல் விலைகளைவிட அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது. அதுபோல் தக்காளி விலை, தங்கத்தைவிட நாளுக்கு நாள் விலை உயர்கிறது.

இதை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், தக்காளி விலை உயர்வை குறைக்க வேண்டும் என்றால் மக்கள் அனைவரும் தங்களுடைய மாடி வீட்டு தோட்டத்தில் தக்காளியை அதிகமாக பயிர் செய்தால் இந்த விலை உயர்வை குறைக்க முடியும் என்று தங்கள் பிரியாணி கடைக்கு வரும் பொதுமக்களிடம் பிரசாரம் செய்கின்றனா்.

Tags

Next Story
ai in future agriculture