தனியார் நிறுவன அதிகாரி மீது பாலியல் புகார்: நடவடிக்கை காேரி பெற்றோர் முற்றுகை

தனியார் நிறுவன அதிகாரி மீது பாலியல் புகார்: நடவடிக்கை காேரி பெற்றோர் முற்றுகை
X
பைல் படம்
தனியார் குளிர்பான நிறுவனத்தின் அதிகாரி மீது பாலியல் புகார் தெரிவித்த பெற்றோர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த தச்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேளாங்கண்ணி இவரது மகள் ஷைனியா (வயது 20 ) கடந்த 3 ஆண்டுகளாக மாமண்டூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் குளிர்பான தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார்.

கடந்த மூன்று நாட்களுக்கு முன் வேலைக்கு சென்றார். பின்னர் அவரது பெற்றோருக்கு செல்போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய கம்பெனி நிர்வாகத்தினர் ஷனியாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் நிர்வாகம் சார்பில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த ஷைனியா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக டாக்டர்கள் கூறினர்.

பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக உடனடியாக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுதொடர்பாக படாளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், வேளாங்கண்ணி என்பவர் தனியார் குளிர்பான கம்பெனியின் மேலாளராக பணிபுரியும் ஒருவர் தனது மகள் ஷைனியா தற்கொலைக்கு காரணம் என தெரிந்து கொண்டு அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் உடந்தையாக இருந்த நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேற்று காலை படாளம் போலீசில் புகார் செய்தனர்.

அப்போது'அவருடன் சென்ற உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கம்பெனி நிர்வாகத்தின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட பெற்றோரிடம் சமரசம் பேசிய போலீசார் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.

இது குறித்து பெண்ணின் உறவினர்கள் கூறுகையில் ஷைனியாவுக்கு கம்பெனியின் மேலாளர் பிரிவில் பணிபுரியும் நிறுவன மேலாளர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அவர் தற்கொலை முடிவை எடுத்துள்ளார். எனவே சம்பந்தப்பட்ட நபரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என புகார் மனு அளித்து முற்றுகையிட்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!