கள்ளபிரான்புரம் ரேஷன் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

கள்ளபிரான்புரம் ரேஷன் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
X

கள்ளபிரான்புரம் ரேஷன் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் செய்தனர்.

கள்ளபிரான்புரம் ரேஷன் கடையில் முறையாக பொருட்கள் வழங்கவில்லை என 100க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு பேராட்டம் செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த கள்ளபிரன்புரம் கிராமத்தில் நியாய விலைகடை இயங்கி வருகிறது. இந்த கடையில் வேலை செய்து வருபவர் சரவணன் இவர் அரிசி பருப்பு, கோதுமை, சர்க்கரை, ஆகிய பொருட்கள் முறையாக வழங்கவில்லை எனவும்,

தொடர்ந்து கடை திறப்பதில்லை எனவும் பொதுமக்கள் குற்றம் குற்றம்சாட்டி கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் கொரோனா நிவாரண பொருட்களை குறித்த நாட்களில் சரியாக வழங்கவில்லை எனவும் கள்ளச்சந்தையில் பொருட்களை விற்பனை செய்வதாகவும் குற்றம்சாட்டு வைத்தனர்.

அப்போது தகவலறிந்து வந்த படாளம் காவல் ஆய்வாளர் டி.எஸ்.சரவணன் நியாயவிலைக் கடை ஊழியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்

பொருட்கள் முறையாக வழங்கப்படும் எனவும் வாக்குறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags

Next Story
ராசிபுரத்தில் வள்ளலாா் சுத்த சன்மாா்க்க சங்கம் சாா்பில் 49 ஆம் ஆண்டு தைப்பூச அன்னதானப் பெருவிழா