பெரும்பேர்கண்டிகை ஊராட்சியில் 19வது கொரோனா மெகா தடுப்பூசி முகாம்

பெரும்பேர்கண்டிகை ஊராட்சியில் 19வது கொரோனா மெகா தடுப்பூசி முகாம்
X

முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள். 

மதுராந்தகம் அருகே, பெரும்பேர்கண்டிகை ஊராட்சியில் 19வது கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

தமிழகத்தில் நேற்று, 19-வது கட்டமாக மெகா தடுப்பூசி முகாம், 50,000 மையங்களில் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட பெரும்பேர்கண்டிகை ஊராட்சியில், கொரோனா மெகா தடுப்பூசி சிறப்ப முகாம் நடைபெற்றது.

முகாமில் கிராம பொதுமக்கள் ஆர்வமுடன், நீண்ட வரிசையில் நின்று தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை பெரும்பேர்கண்டிகை ஊராட்சிமன்ற தலைவர் சாவித்ரி சங்கர் செய்திருந்தார். அச்சிறுப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் சசிகலா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மங்கையர்கரசி, 13-வது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் ஜா.பார்த்தசாரதி, அச்சிறுபாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவர் சுரேஷ், செவிலியர் முத்துபாண்டி, அங்கன்வாடி பணியாளர் ஆர்.லட்சுமி, ஊராட்சி செயலர் சு.ஏழுமலை மற்றும் துணைத்தலைவர் வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!