கனமழையால் மதுராந்தகம் ஏரிக்கு நீர்வரத்து மும்மடங்கு உயர்வு

கனமழையால் மதுராந்தகம் ஏரிக்கு நீர்வரத்து மும்மடங்கு உயர்வு
X

மதுராந்தகம் ஏரி

மழை காரணமாக, மதுராந்தகம் ஏரிக்கு நீர்வரத்து தற்போது, 3 மடங்காக உயர்ந்து, 6 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி அதன் முழு கொள்ளளவான 23.3 அடியில், கடந்த 4 தினங்களாக பெய்த மழையால் அதன் முழு கொள்ளளவை எட்டியது. நேற்று வினாடிக்கு 2 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து இருந்த போது தற்போது மூன்று மடங்கு உயர்ந்து 6 ஆயிரம் கன அடி நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இவை அனைத்தும் 110 தானியங்கி ஷட்டர் மற்றும் கலங்கல் வழியாக கிளியாற்றில் வெளியேறுகிறது. ஏரியில் 694 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. உபரிநீராக வரும் 6ஆயிரம் கன அடி நீர் வெளியேறுகிறது. நேற்று இரவு முதல், ஏரியின் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து இருந்தாலும், தற்போது மழை குறைந்து உள்ளது. ஆனால் காற்றின் வேகம் அதிகரித்துள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!