மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேல் சூறாவளி பிரச்சாரம்

மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேல் சூறாவளி பிரச்சாரம்
X

இராவதநல்லூர் 5வது வார்டில் பிரசாரம் மேற்கொள்ளும் அதிமுகவினர் 

மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் இராவதநல்லூர் 5வது வார்டில் திறந்தவெளி வேனில் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டார்

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுபாக்கம் பேரூராட்சிக்குட்பட்ட இராவத்தநல்லூர் தமிழ்நாடு இயற்கை சுற்று சூழல் ஆர்வலரும் அதிமுக கிளை செயலாளருமான தனசேகரன் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அச்சிறுப்பாக்கம் பேரூராட்சிக்குட்பட்ட 5வது வார்டு இராவத்தநல்லூரில் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

இதை தொடர்ந்து அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியின் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் இராவதநல்லூர் 5வது வார்டில் திறந்தவெளி வேனில் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டார். அங்கு கூடியிருந்த கிராம மக்கள் ஆரத்தி எடுத்து பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர். அப்போது மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் பொதுமக்களிடம் கூறுகையில்,

கடந்த 9 மாதங்களாக தொடர்ந்து திமுக பொதுமக்களை ஏமாற்றி வருவதாகவும் பொங்கல் தொகுப்பு பரிசு காலாவதியான பொருட்களை வழங்கியுள்ளதாகவும் அதை பெற்றுக் கொண்ட பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி உள்ளதை சுட்டிக்காட்டினார்,

அதனைத் தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கும் பகுதிகளில் திமுக தொடர்ந்து பொய் பிரச்சாரம் செய்துவருவதாக சுட்டிக்காட்டினார். மேலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நல்லாட்சி தொடங்கிட மறவாமல் 5-வது வார்டு உறுப்பினர் தனசேகரன் அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார்.

குறிப்பாக நீண்ட நாட்களாக நிறைவேற்றப்படாத இடுகாட்டு பாதை மற்றும் அங்கன்வாடி மைய கட்டிடம் நியாயவிலைக்கடை தமிழக அரசு உதவியுடன் அமைக்க வழிவகை செய்யப்படும், மழைக்காலங்களில் வீடுகள் வெள்ளத்தில் மிதக்கும் நிலை உள்ளதால் மழைநீர் வடிகால் கால்வாய் அமைத்து தர வழிவகை செய்யப்படும் என வாக்குறுதி அளித்தார்.

இந்நிகழ்வில் அனந்தமங்கலம் சுப்பிரமணியம், ஏ.இ.முருகதாஸ், மூத்த வழக்கறிஞர் அகோரம் லீலாவதி, ஒ.எம்.சுரேஷ், திருவாதூர் ஊராட்சி மன்ற தலைவர் பாரதிபாபு, கொடூர் ஊராட்சி மன்ற தலைவர் புண்ணியகோட்டி, அபிஷேக், திருப்பதி, மகேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர் உடனிருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!