மதுராந்தகம்: கார் கண்ணாடி உடைத்து ரூ. 15 லட்சம் மதிப்பு நகை கொள்ளை

மதுராந்தகம்:  கார் கண்ணாடி உடைத்து ரூ. 15 லட்சம் மதிப்பு நகை  கொள்ளை
X

 நகை திருடு போன கார். 

மதுராந்தகம் அருகே ஐடி ஊழியரின் கார் கண்ணாடியை உடைத்து 15 லட்சம் மதிப்புடைய தங்கநகை, லேப்டாப் கொள்ளை போனது.

சென்னை ஐடி நிறுவன ஊழியர் கிருஷ்ணன் சென்னையில் இருந்து தனது குடும்பத்துடன் காரில் கும்பகோணம் புறப்பட்டார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே செல்லும் போது, சென்னை திருச்சி நெடுஞ்சாலையில் வழியில் மாமண்டூரில் உள்ள தனியார் உணவகம் எதிரே தனது காரை நிறுத்திவிட்டு உணவகம் சென்று திரும்பினார்.

காரின் கண்ணாடியை உடைக்கப்பட்டு காரில் இருந்த 15 லட்சம் மதிப்புள்ள 36 சவரன் தங்க நகை 2 லேப்டாப் திருட்டு போய் உள்ளது. இந்த திருட்டு சம்பவம் குறித்து படாளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!