50 ஆண்டு பழமையான மின்மாற்றி: மின் பற்றாக்குறையால் ஆன்லைன் வகுப்புக்கு ஆஜராக முடியாமல் மாணவர்கள் தவிப்பு

50 ஆண்டு பழமையான மின்மாற்றி: மின் பற்றாக்குறையால் ஆன்லைன் வகுப்புக்கு ஆஜராக முடியாமல் மாணவர்கள் தவிப்பு
X

50 ஆண்டுகால பழமையான மின்மாற்றி 

50 ஆண்டுகளுக்கு முன் அமைத்த மின்மாற்றியை அகற்றி, புதிய மின்மாற்றியை அமைக்க கிராமத்தினர் கோரிக்கை

செங்கல்பட்டு மாவட்டம் அத்திவாக்கம் ஊராட்சிக்குட்பட்ட கீழ்க்கண்டை கிராமத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட மின்மாற்றியை அகற்றிவிட்டு புதிய மின் மாற்றி அமைக்க அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கீழ்கண்டை கிராமத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் குறைந்த அளவே மக்கள் வசித்து வந்தனர். அன்றைய நிலைமைக்கேற்றார்போல் மின்மாற்றி அமைக்கப்பட்டு அக்கிராமத்திற்கு மின் விநியோகம் வழங்கப்பட்டது.

தற்போது சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள், இந்த கிராமத்தில் வசித்துவருகின்றனர். ஆனால், மின் பற்றாக்குறை ஏற்பட்டு மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளை கூட படிக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வீட்டில் உள்ள மின் உபகரணங்கள் தொடர்ந்து பழுதாகி வருகின்றன. இதனால் அப்பகுதி மக்கள் வேதனை அடைந்து வருகின்றனர்.

எனவே, மின்சாரத்துறையினர் தங்களது கிராமத்தில் உள்ள பழைய மின்மாற்றியை அகற்றிவிட்டு, புதிய மின்மாற்றியை அமைக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story