அச்சிறுப்பாக்கத்தில் சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க ராணுவ ஒத்திகை

அச்சிறுப்பாக்கத்தில்   சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள்  அச்சமின்றி வாக்களிக்க ராணுவ ஒத்திகை
X
அச்சிறுப்பாக்கம் நகரில் தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் ராணுவ வீரர்களின் அணிவகுப்பு

மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அச்சிறுப்பாக்கம் நகரில் பொதுமக்கள் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் ராணுவ வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்றது.

தேர்தல் பாதுகாப்புடன் நடைபெற நடந்த இந்த ராணுவ அணிவகுப்பில், திரிபுரா பட்டாலியன்- 80 பிரிவைச் சார்ந்த எல்லை பாதுகாப்பு படை டி.எஸ்.பி அனுபவஅத்திரியா தலைமையில் 83 ராணுவ வீரர்கள் ராணுவ ஒத்திகைநடத்தினர். இதனை மதுராந்தகம் டி.எஸ்.பி.கவினா தலைமை ஏற்று தொடங்கி வைத்தார். ராணுவ அணிவகுப்பு அச்சிறுப்பாக்கம் பஜார் வீதி உள்ளிட்ட முக்கிய சாலைகளில் நடைபெற்றது.

இந்த அணிவகுப்பின் போது அச்சிறுப்பாக்கம் இன்ஸ்பெக்டர் டி.எஸ்.சரவணன், மதுராந்தகம் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், சூனாம்பேடு இன்ஸ்பெக்டர் மதியரசன், செய்யூர் இன்ஸ்பெக்டர் சின்னதுரை, உட்பட சக காவலர்கள் பங்கேற்றனர்.

Tags

Next Story
ai robotics and the future of jobs