ஆட்சீஸ்வரர் ஆலயத்தில் ஞானசம்பந்தர் திருமுலைப்பால் பெற்ற வைபவம்

ஆட்சீஸ்வரர் ஆலயத்தில் ஞானசம்பந்தர் திருமுலைப்பால் பெற்ற வைபவம்
X

செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் ஸ்ரீ இளங்கிளி அம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் திருக்கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா 17ம் தேதி கொடியேற்றத் துடன் தொடங்கியது. இத்திருக்கோயிலில் 16ஆம் தேதி இரவு ஸ்ரீ விக்னேஸ்வர உற்சவமும் நடந்தது. மூன்றாம் நாள் 63 நாயன்மார்களும் மற்றும் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முருகப் பெருமான், ஆட்சீஸ்வரர், இளங்கிளி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கும் கோயில் மூத்த அர்ச்சகர் சங்கர் சிவாச்சாரியார் தலைமையில் சிறப்பு அபிஷேக, அலங்காரமும் ஆராதனைகள் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து கொன்றை மரம் உள்ள இடத்தில் திருஞானசம்பந்தர்க்கு திருமுலைப்பால் உற்சவம் நிகழ்வு நடந்தது, மேலும் கோயிலின் உட்பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். நிகழ்வில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!