அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோவிலில் 5 ஆண்டுக்கு பிறகு அபிஷகம்

செங்கல்பட்டு அருகே, அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோவிலில் நடராஜ பெருமானுக்கு சித்திரை மாத அபிஷகம் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் அருகே, அருள்மிகு இளங்கிளி அம்மன் உடனுறை ஸ்ரீ ஆட்சீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இங்கு, வருடத்திற்கு 5 முறை மட்டும் ஸ்ரீ ஆடவல்லான் நடராஜ பெருமான் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

இதில், பிலவ வருடத்திற்கான முதல் அபிஷேகம், சித்திரை மாதம் திருவோண நட்சத்திரத்தில், கோவில் மூத்த அர்ச்சகர் சங்கர் சிவாச்சாரியார் தலைமையில் நடைபெற்றது. இதை முன்னிட்டு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் , சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, இந்த வைபவத்தில், பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. திருக்கோயில் பணியாளர்கள் மட்டுமே இதில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!