அரசு பள்ளியில் அதிநவீன சி.சி.டி.வி கேமரா: அதிமுக வேட்பாளர் வாக்குறுதி

அரசு பள்ளியில் அதிநவீன சி.சி.டி.வி கேமரா:  அதிமுக வேட்பாளர் வாக்குறுதி
X
காட்டுகரணை அரசு பள்ளியில் அதிநவீன சி.சி.டி.வி கேமரா பொருத்தப்படும் என அச்சிறுபாக்கம் அதிமுக வேட்பாளர்வாக்குறுதி.

அச்சிறுப்பாக்கம் அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு பாமக சார்பில் காட்டுக்கரணை கிராமத்தில் பட்டாசு வெடித்து மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், அச்சிறுப்பாக்கம் மத்திய ஒன்றியத்திற்குட்பட்ட15க்கும் மேற்பட்ட கிராமங்களில் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

காட்டுக்கரணை கிராமத்தில் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வரும் அண்ணாநகர் பகுதியில் வசிக்கும் சுமார் 25க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு பட்டா வழங்கவும், குடிநீர் தட்டுப்பாடு உள்ள பகுதிகளில் சிறு மின்விசை பம்பு அமைப்பது, பசுமை தொகுப்பு வீடு கட்டித்தர நடவடிக்கை எடுப்பது, அண்ணாநகர் அரசு பள்ளிக்கு மாணவ மாணவிகள் பாதுகாப்பு நலன் கருதி அதிநவீன சி.சி.டி.வி கேமரா பொருத்துவது, படித்த பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு போன்றவற்றை கேட்டறிந்ததோடு, தேர்தலில் வெற்றி பெற்றவுடன் பொதுமக்களின் குறைகளை தீர்த்து வைப்பதாக வாக்குறுதி அளித்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் ஆத்தூர் வா.கோபாலகண்ணன், தலைமையில் சுமார் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து வரவேற்றனர். தோழமை கட்சியான பாமகவினர் அதிமுக வேட்பாளருடன் ஆரம்பம் முதல் கடைசி வரை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
ai in agriculture india