திமுக தலைவர் ஸ்டாலின் 68 வது பிறந்தநாள் விழா

திமுக தலைவர் ஸ்டாலின் 68 வது பிறந்தநாள் விழா
X

செங்கல்பட்டில் திமுக தலைவர் ஸ்டாலினின் 68 வது பிறந்தநாள் விழா நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் திமுக தலைவர் ஸ்டாலினுடைய 68,வது பிறந்தநாளை திமுக வினர் கோலாகலமாக கொண்டாடினர். இதில் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினரும் காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளருமான சுந்தர் ஆலோசனைப்படி செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் உள்ள திமுக ஆதரவாளர் தியாகராஜன் செய்யூர் பஜார்பகுதியில் கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.மேலும் இருளர் குடும்பங்கள், பொதுமக்கள் என 500,க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானங்கள் வழங்கினார்.

விழாவில் இலத்தூர் தெற்கு ஒன்றிய திமுகழக பொறுப்பாளர் பாபு, முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ராமமூர்த்தி, மாவட்ட பிரதிநிதி பாபு, கிளை செயலாளர்கள் மணிவண்ணன், முருகன், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் நாராயணசாமி உட்பட திமுக முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ஈரோட்டில் வருமான வரித் துறை சோதனை நிறைவு..!