சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.32.16 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

சென்னைக்கு  விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.32.16 லட்சம் மதிப்பிலான  தங்கம் பறிமுதல்
X

சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட தங்கம் பறிமுதல்

சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ 32.16 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

சாா்ஜாவிலிருந்து விமானத்தில் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.32.16 லட்சம் மதிப்புடைய 745 கிராம் தங்கக்கட்டிகளை சென்னை விமானநிலையத்தில் சுங்கத்துறை பறிமுதல் செய்து,ஆந்திரா பயணிகள் இருவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

சாா்ஜாவிலிருந்து ஏா் அரேபியா ஏா்லைன்ஸ் விமானம் நேற்று இரவு சென்னை சா்வதேச விமானநிலையம் வந்தது.அதில் வந்த பயணிகளை சென்னை விமானநிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனா்.

அப்போது ஆந்திராவை சோ்ந்த 2 பயணிகள் மீது சுங்கத்துறைக்கு சந்தேகம் ஏற்பட்டது.அவா்களை நிறுத்தி உடமைகளை சோதனையிட்டனா்.அவா்களின் உடைமைக்குள் கிப்ட் பேப்பரால் சுற்றப்பட்ட ஒரு பாா்சல் இருந்தது.அதை சுங்கத்துறையினா் பிரித்து பாா்த்தனா்.அதற்குள் இருந்த அட்டைப்பெட்டிக்குள் மரத்தூள்கள் இருந்தன.அந்த தூள்களுக்கிடையே 2 தங்கக்கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.அவைகளின் மொத்த எடை 745 கிராம்.அதன் சா்வதேச மதிப்பு ரூ.32.16 லட்சம்.

இதையடுத்து சுங்க அதிகாரிகள் பயணிகள் இருவரையும் கைது செய்தனா்.அதோடு தங்கக்கட்டிகளையும் பறிமுதல் செய்தனா்.ஸ்கேன் பரிசோதனையில் தங்கக்கட்டிகள் இருப்பது தெரியாமல் இருப்பதற்காக, மரத்தூள்கள் அடங்கிய பாா்சலில் தங்கக்கட்டிகளை மறைத்து எடுத்துவந்தது தெரியவந்துள்ளது.இவா்களிடம் சுங்கத்துறையினா் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!