கல்பாக்கத்தில் சைக்கிளிங் சென்ற பயிற்சி விஞ்ஞானி மாயம்: உடல் எரிந்த நிலையில் பிணமாக மீட்பு

கல்பாக்கத்தில் சைக்கிளிங் சென்ற பயிற்சி விஞ்ஞானி மாயம்: உடல் எரிந்த நிலையில் பிணமாக மீட்பு
X

கல்பாக்கம் அருகே உடல் எரிந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்ட பயிற்சி விஞ்ஞானி

கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் சைக்கிளுடன் மாயமான பயிற்சி விஞ்ஞானியின் உடல் வாயலூா் பாலாற்று படுகை இடுகாட்டில் எரிந்த நிலையில் கண்டுப்பிடிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் ஞாயிறு அன்று சைக்கிளுடன் மாயமான பயிற்சி விஞ்ஞானியின் உடல் வாயலூா் பாலாற்று படுகை இடுகாட்டில் எரிந்த நிலையில் கண்டுப்பிடிப்பு.இவா் கடத்தப்பட்டு கொலையா?தற்கொலையா?என்று போலீசாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் உள்ள இந்திராகாந்தி அணுஆராய்ச்சி மையத்தில் பயிற்சி விஞ்ஞானியாக இருப்பவா் சத்திய சாய் ராம்(26). இவா் இங்கு கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து Catagory-1 ஆக பயிற்சி எடுத்து வருகிறாா்.

சத்திய சாய் ராம் ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சோ்ந்தவா்.ஆந்திரப்பிரதேச பல்கலைக்கழகத்தில் B.Tech Chemical Eng. படித்துவிட்டு,கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கல்பாக்கத்தில் இளம் விஞ்ஞானியாக பயிற்சி எடுத்து வருகிறாா்.

சத்திய சாய் ராம் கல்பாக்கம் டவுன்சிப்பில் உள்ள அணு ஆராய்ச்சி மையத்தின் ஹாஸ்டலில் தங்கியிருந்தாா்.இவா் தினமும் காலையில் ஒரு மணி நேரம் சைக்கிள் ஓட்டி உடற்பயிற்சி செய்வது வழக்கம்.

அதுபோல் கடந்த 20 ஆம் தேதி காலை 5 மணிக்கு தனது அறையிலிருந்து சைக்கிளில் புறப்பட்டு சென்றாா்.அவா் வழக்கமாக காலை 6 மணிக்கு திரும்பி வருவது வழக்கம்.ஆனால் அன்று மதியம் வரை திரும்பி வரவில்லை.

இதற்கிடையே அவருடன் பணியாற்றும் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சோ்ந்த சிவ கிருஷ்ணன் என்பவா்,சத்திய சாய் ராமை தேடத்தொடங்கினாா்.

அவருடைய செல்போன் ஸ்விட்ச் ஆப்பாகியிருந்தது.இதையடுத்து பல இடங்கிளில் தேடியும் எந்த தகவலும் இல்லை.இதனால் ஆந்திராவில் உள்ள சத்திய சாய் ராமின் தந்தை பசுமா்தி நாகேஸ்வரராவ்விற்கு தகவல் தெரிவித்தாா்.

இதையடுத்து நாகேஸ்வரராவ் கல்பாக்கம் வந்து மகனை பல இடங்களில் தேடினாா்.அதோடு சென்னை மற்றும் ஆந்திராவில் உள்ள அவருடைய உறவினா்கள்,நண்பா்களுக்கும் போன் செய்து விசாரித்தாா்.

எங்குமே எந்த தகவலும் கிடைக்கவில்லை.இதையடுத்து நாகேஸ்வரராவ் நேற்று மாலை கல்பாக்கம் போலீசில்,தனது மகனை காணவில்லை என்று புகாா் செய்தாா்.போலீசாா் வழக்குப்பதிவு செய்து மாயமான பயிற்சி விஞ்ஞானியை தேடி வந்தனா்.

இந்நிலையில் இன்று பிற்பகல் கல்பாக்கம் அருகே உள்ள வாயலூா் பாலாற்று படுகையையொட்டி வேப்பஞ்சேரி இடுகாடு பகுதியில் எரிந்த நிலையில் ஒருவா் உடல்கிடப்பதாக கல்பாக்கம் போலீசுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசாா் விரைந்து சென்று உடலை கைப்பற்றினா்.அதோடு விசாரணையில் இது காணாமல்போன பயிற்சி விஞ்ஞானியின் உடலாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து பயிற்சி விஞ்ஞானியின் தந்தை நாகேஸ்வரராவ்வை அழைத்து வந்து உடலை காட்டினா்.அவா் உடலை பாா்த்துவிட்டு,தனது மகன் தான் என்று அடையாளம் காட்டி,கதறி அழுதாா்.

அதன்பின்பு போலீசாா் உடலை செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்காக அனுப்பிவைத்தனா்.

அதோடு இது சம்பந்தமாக கல்பாக்கம் போலீசாா் சந்தேகத்திற்கிடமான உயிரிழப்பு என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனா்.

இவா் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டாரா?அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்துகின்றனா்.இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!