செய்யூர் தொகுதி வேட்பாளரை மாற்ற அதிமுகவினர் சாலை மறியல்

செய்யூர் தொகுதி வேட்பாளரை மாற்ற  அதிமுகவினர் சாலை மறியல்
X
செய்யூர் தொகுதி வேட்பாளரை மாற்றக் கோரி அதிமுகவினர் சாலை மறியல்

செய்யூர் தொகுதி வேட்பாளரை மாற்றக் கோரி அதிமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

அதிமுக சார்பில் செய்யூர் தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட வேட்பாளரை மாற்றக்கோரி கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.செய்யூர் தொகுதி அதிமுக வேட்பாளராக நேற்று மாலை மதுராந்தகம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கனிதா சம்பத் அறிவிக்கப்பட்டார்.

வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அவருக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு , சித்தாமூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் டாக்டர்.பிரவீன் குமாரை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என சித்தாமூர் கிழக்கு ஒன்றிய அதிமுக தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று சித்தாமூர் மும்முனை சாலை பகுதியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு விரைந்து வந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த சாலை மறியலால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!