கொரோனா தொற்றால் இறந்தவரின் உடலை கிராமத்தில் அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு

கொரோனா தொற்றால் இறந்தவரின் உடலை கிராமத்தில் அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு
X

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே உள்ள தேவனூர் கிராமத்தினர் கொரோனா தொற்றால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர்.

கொரோனா தொற்றால் உயிரிழந்தவரின் உடலை கிராமத்தில் அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே உள்ள தேவனூர் கிராமத்தை சேர்ந்தவர் சோலை வயது 62 கொரோணா தொற்றால் பாதிக்கப்பட்ட இவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கடந்த 4ஆம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு அருகில் இருந்த கொரோணா தொற்று நோயாளி ஒருவர் உயிரிழந்தால் பயத்தில் மருத்துவமனையில் இருந்து தப்பித்து தனது சொந்த ஊரான தேவனுருக்கு வந்துவிட்டார்.

மேலும் உடல்நிலை மோசமான நிலையில் சோலை, இன்று உயிர் இறந்த காரணத்தால் அவரது உடலை கிராமத்தில் உள்ள இடுகாட்டில் புதைக்க அவரது மகன்கள் கிராம நிர்வாக அதிகாரிக்கு தகவல் கொடுத்து அதன் பேரில் அவர்கள் அவரது சடலத்தை டிராக்டர் மூலம் கொண்டு சென்று சுடுகாட்டில் புதைக்க முயன்றனர்.

அப்போது, கிராம மக்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த சோலையின் மகன்கள் டிராக்டரை சடலத்துடன் சாலையில் விட்டு விட்டனர்,

பிறகு செய்யூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது போலீசார் வந்து தடுத்து நிறுத்திய கிராம மக்களிடம் சமரசம் பேசி சடலத்தை மறைமலை நகர் மின் மயானத்தில் தகனம் செய்ய ஏற்பாடு செய்து உள்ளதாக கூறினர். இதனால் கிராமக்கள் திரும்பிச் சென்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!