செங்கல்பட்டு விஜயபாஸ்கர் உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

செங்கல்பட்டு விஜயபாஸ்கர் உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை
X

செங்கல்பட்டு மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உறவினர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடைபெறுகிறது.

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீடு குவாரி மற்றும் நண்பர்கள் வீடு, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டு வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது,

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, திருச்சி,கோவை உள்ளிட்ட 43 இடங்களில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

அமைச்சராக இருந்த காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் செங்கல்பட்டு மாவட்டம் புதுபட்டினம் பகுதியில் உள்ள விஜயபாஸ்கர் தங்கை (சித்தப்பா மகள்) தனலட்சுமி (பல் மருத்துவர்) வீட்டில் அதிகாலை முதல் 5 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் மதுராந்தகம் அருகே உள்ள அவரது உறவினர்கள் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்த உள்ளதாக தகவல்காள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!