சித்தாமூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராடிய பொதுமக்கள்

சித்தாமூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராடிய பொதுமக்கள்
X

சித்தாமூர் காவல் நிலையம் பைல் படம்.

சித்தாமூர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரை அவதூராக பேசியதாக பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தாலுகாவுக்கு உட்பட்ட சித்தாமூர் ஒன்றியம், தண்டலம் கிராமத்தைச் சேர்ந்த திருமலை செல்வி என்பவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தை மாரி என்பவருக்கு கடந்த 2012 ஆம் ஆண்டு விற்றுள்ளார்.

இந்த நிலம் விற்பனையின் போது தண்டலம் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரான தேவராஜ் என்பவர் சாட்சிக் கையெழுத்துயிட்டுள்ளார்.

இந்த நிலம் விற்பனை சம்பந்தமாக குணசேகரன் என்பவர் சித்தாமூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த கொடுத்துள்ளார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் சாட்சிக் கையெழுத்திட்ட தண்டலம் கிராமத்தைச் சேர்ந்த தேவராஜ், விசாரணைக்கு வருமாறு சித்தாமூர் காவல் உதவியாளர் அழைத்துள்ளார்.

அப்பொழுது இருதரப்பினரையும் அழைத்து முழு விசாரணை செய்யாமல் உதவி ஆய்வாளர் நந்தகுமார், நான் சொல்வதை கேளுங்கள். இல்லையென்றால் காவல் நிலையத்தை விட்டு வெளியே செல்லுங்கள். துப்பாக்கி எடுத்து சுட்டு விடுவேன் என மிரட்டும் தோனியில் பேசி உள்ளார்.

அதன் பின்னர், கிராம மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ,காவல் உதவி ஆய்வாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும், உதவி ஆய்வாளரின் தன்னிச்சையான செயல்பாடு குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story