/* */

செங்கல்பட்டு: கொரோனா நிவாரணநிதி மூலம் ஏழைகளுக்கு உணவளிக்கும் குடும்பம்!

செங்கல்பட்டில் தமிழக அரசால் வழங்கப்பட்ட கொரோனா நிவாரண நிதி மூலம் ஏழைகளுக்கு ஒரு குடும்பம் உணவு வழங்கி வருகிறது.

HIGHLIGHTS

செங்கல்பட்டு: கொரோனா நிவாரணநிதி மூலம் ஏழைகளுக்கு உணவளிக்கும் குடும்பம்!
X

ஏழைகளுக்கு உணவு வழங்கும் குடும்பத்தினர்.

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தை அடுத்த புதுப்பட்டினம் ஹாஜியார் நகரில் வசித்து வருபவர் சுதா. இவர் தனது குடும்ப அட்டைக்கு தமிழக அரசால் வழங்கப்பட்ட கொரோனா நிவாரண நிதி 2000 ரூபாய் மற்றும் தனது தந்தை மற்றும் உறவினருக்கு வழங்கப்பட்ட தொகை ரூபாய் 6 ஆயிரத்தை வைத்துக்கொண்டு கொரோனா ஊரடங்கில் உணவுக்கு வழியின்றி தவித்து வரும் சாலையோரம் வசிக்கும் இயலாதவர்களுக்கு உணவளித்தார்.

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் தங்களால் இயன்ற அரிசி, காய்கறி மற்றும் மளிகை பொருட்களை வழங்கியுள்ளனர். இதனை வைத்து தினமும் இயலாதவர்களுக்கும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் காவல்துறையினருக்கும், தூய்மைப் பணியில் ஈடுபட்டிருக்கும் தூய்மை பணியாளர்களுக்கும் என 15வது நாளாக தொடர்ந்து 300 பேருக்கு தனது வீட்டிலேயே வைத்து தரமான உணவுகளை சமைத்து வழங்கி வருகிறார். இதனால் அப்பகுதி மக்கள் அவர்களது சேவையை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Updated On: 4 Jun 2021 12:10 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  2. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  3. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  5. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  6. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  7. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  8. வீடியோ
    மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு !பாஜக நிர்வாகியால் முதல்வர்...
  9. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா