/* */

சென்னை விமானநிலையத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி பேட்டி

சென்னை விமானநிலையத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி அளித்தார்.

HIGHLIGHTS

சென்னை விமானநிலையத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி பேட்டி
X

சென்னை விமானநிலையத்தில் பேட்டி அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி

தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தனது பிறந்த நாளை முன்னிட்டு சீரடி சென்றார். சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் அன்பில் மகேஷை திமுகவினர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

ஒமிக்கிரான் வைரஸ் தமிழகத்தில் வந்ததாக எந்த ஒரு தகவலும் வரவில்லை. பொது சுகாதார துறை மூலமாக தகவல் வந்ததால் அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும். முதலமைச்சர் பொது சுகாதார துறை நிபுணர்களுடன் கலந்து பேசி முடிவு எடுப்பார்.

மழைக்காலத்தில் தொற்று வியாதிகள் இருப்பது தான். பள்ளிகளில் தண்ணீர் தேங்கி இருந்தால் உடனடியாக அகற்ற வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கல்வி முதன்மை அலுவலர்கள் கூட்டத்தில் பாதிக்கப்பட்ட பள்ளி வகுப்பறையில் யாரையும் அமர்த்த கூடாது. அந்த கட்டிடத்தை இடித்து புதிதாக கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Updated On: 2 Dec 2021 2:11 PM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழில் நூற்றுக்கு நூறு ஒருவர் கூட...
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 87.55 சதவீதம்...
  3. காஞ்சிபுரம்
    ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி...
  4. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  5. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...
  6. லைஃப்ஸ்டைல்
    மனதைத் திறப்பது: பாசம் வழியான பயணம்
  7. லைஃப்ஸ்டைல்
    "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்": கைவசப்படுத்தும் காதல் மேற்கோள்கள்
  8. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...
  9. நாமக்கல்
    நாமக்கல் டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு...
  10. தமிழ்நாடு
    புதிய ‘லே அவுட்’ அனுமதியை நிறுத்த முடியாது..!