மழையால் செங்கல்பட்டு மாவட்டத்தில் 415 ஏரிகள் 100% நிரம்பின

மழையால் செங்கல்பட்டு மாவட்டத்தில் 415 ஏரிகள் 100%  நிரம்பின
X

கோப்பு படம்

தொடரும் கனமழையால், செங்கல்பட்டு மாவட்டத்தில் 415 ஏரிகள் 100% நிரம்பி உள்ளன.

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில தினங்களாக செங்கல்பட்டு மாவட்டத்தில், தொடர் மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு சில விவசாய பகுதிகளில் விளை நிலங்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டது.

தொடர் மழையால், மாவட்டத்தில் உள்ள ஏரி மற்றும் குளங்களுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 528 ஏரிகள் உள்ளன. இதில், 415 ஏரிகள் 100% நிரம்பி உள்ளன. 75 சதவீதத்துக்கு மேல் 93 ஏரிகளும், 50 சதவிகிதத்திற்கு மேல் 18 ஏரிகளும் நிரம்பி உள்ளன. ஏரிகளின் நீர்வரத்தை தொடர்ந்து கவனித்து வருவதாகவும், பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி உள்ளதாகவும் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!