தொடர்மழை எதிரொலி: செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

தொடர்மழை எதிரொலி: செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
X
தொடர்மழை எதிரொலியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

தொடர் மழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக காரணமாக பல மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று முதல் மழை தொடர்ச்சியாக பெய்து வருகிறது. இதனையொட்டி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஆ.ராகுல்நாத் உத்தரவிட்டுள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!