குழந்தைகள் பாதுகாப்பு தினம்- மாணவிகள் உறுதிமொழி

குழந்தைகள் பாதுகாப்பு தினம்- மாணவிகள் உறுதிமொழி
X

மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தையொட்டி (பிப். 24)செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளி மாணவிகள் உறுதிமொழி ஏற்றனர்.

பெண் குழந்தைகளுக்காக முன்னாள் முதல்வா் ஜெயலலிதா ஆற்றிய சேவையை நினைவுகூறும் வகையில் அவரது பிறந்த நாளான பிப்ரவரி 24-ம் தேதியை ஆண்டுதோறும் மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாகக் கொண்டாட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதைத் தொடா்ந்து இன்றைய தினம் பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களில், பெண் குழந்தைகள் பாதுகாப்பு உறுதிமொழி எடுக்க, அரசு உத்தரவிட்டுள்ளது.

இன்று அதன்படி அனைத்து பள்ளிகளிலும் பெண் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி, மனிதச் சங்கிலி, பேரணி, உறுதிமொழி ஏற்பு, கருத்தரங்கு, பயிலரங்கம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தையொட்டி சைல்டுலைன் மற்றும் மாவட்ட குழந்தைகள் நல குழுமம் சார்பில் அலிசன் பள்ளி மாணவர்கள் பெண்கள் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்றனர்.

சைல்டு லைன் பாதுகாப்பு நல அலுவலர் தேவஅன்பு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு குழந்தைகள் நல குழும தலைவர் இராமச்சந்திரன் முன்னிலை வகித்தார்.மேலும் இந்நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் நல குழும நன்னடத்தை அலுவலர் யசோதரன், தயாளன், சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் ஜான்பிரபு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai in future agriculture