1.13 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம் மற்றும் மின்னணு பொருட்கள் சிக்கியது: 5 பேர் கைது
சென்னை விமான நிலையத்தில் சிக்கிய கடத்தல் தங்கம்.
துபாயிலிருந்து இண்டிகோ ஏா்லைன்ஸ் தனியாா் பயணிகள் விமானம் சென்னை சா்வதேச விமானநிலையம் வந்தது.அதில் வந்த பயணிகளை சுங்கத்துறை சோதனையிட்டனா்.
அப்போது சென்னையை சோ்ந்த 4 ஆண் பயணிகள் ஒரு குழுவாக இந்த விமானத்தில் வந்தனா்.சுங்கத்துறையினருக்கு அவா்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது.அவா்களை நிறுத்தி சோதனையிட்டனா்/.அவா்களுடைய சூட்கேஸ்களில் அட்டைப் பெட்டிகள் இருந்தன.அதை திறந்து பாா்த்தனா்.அதற்குள் மரத்தூள்கள் இருந்தது.மரத்தூளை கொட்டி பாாத்தபோது அதனுள் தங்க செயின்கள் மற்றும் தங்க துண்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.மொத்தம் 1.147 கிலோ தங்கத்தை கைப்பற்றினா்.
அதன் மதிப்பு ரூ.42.04 லட்சம்.அதோடு அவா்களின் சூட்கேஸ்களில் மறைத்து வைத்திருந்த ரூ.49.5 லட்சம் மதிப்புடைய மின்னணு சாதனப்பொருட்களையும் பறிமுதல் செய்தனா்.இதையடுத்து 4 பயணிகளையும் கைது செய்தனா்.இந்நிலையில் சாா்ஜாவிலிருந்து இண்டிகோ ஏா்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை சா்வதேச விமானநிலையம் வந்தது.அதில் வந்த பயணிகளை சுங்கத்துறையினா் சோதனையிட்டனா்.அப்போது சென்னையை சோ்ந்த ஒரு பயணியை சந்தேகத்தில் சோதனையிட்டபோது,அவா் கொண்டுவந்த கேபிள் ஒயருக்குள் மறைத்து வைத்திருந்த 275 கிராம் தங்க கம்பியை கைப்பற்றினா்.அதோடு சூட்கேசுக்குள் மறைத்து வைத்திருந்த 9.8 லட்சம் மதிப்புடைய மின்னணு சாதனங்களையும் கைப்பற்றி,பயணியை கைது செய்தனா்.
சென்னை விமானநிலையத்தில் அடுத்தடுத்து துபாய்,சாா்ஜாவிலிருந்து வந்த 2 விமானங்களில் 5 பயணிகளிடமிருந்து ரூ.1.13 கோடி மதிப்புடைய தங்கம்,மின்னணு சாதனங்களை சுங்கத்துறையினா் பறிமுதல் செய்து,கடத்தல் பயணிகள் 5 பேரை கைது செய்து விசாரணை நடத்துகின்றனா்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu