சென்னை டூ மைசூர் வரை புல்லட் ரயிலில் பயணிக்கலாம்

புல்லெட் ரயில் - காட்சி படம்
இந்தியாவில் 2026ல் முதல் புல்லட் ரயில் இயக்குவதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மும்பை முதல் ஆமதாபாத் வரையிலான வழித்தடத்தில் முதல் புல்லட் ரயில் இயக்கப்பட உள்ளதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அதற்குள் அடுத்த புல்லட் ரயில் குறித்த சிறப்பான செய்தி வெளியாகியுள்ளது. நாட்டின் 2வது புல்லட் ரயில் வழித்தடத்தில் தமிழகமும் இணைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை - மைசூர் இடையே இந்த 2வது புல்லட் ரயில் திட்டம் துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான 'ரூட் மேப்' தற்போது வெளியாகியுள்ளது. மொத்தம் 435 கி.மீ., தூரத்தை கொண்டுள்ள இந்த வழித்தடத்தில் இயக்க திட்டமிட்டுள்ள புல்லட் ரயில் அதிகபட்சம் 350 கி.மீ வேகத்தில் இயங்கும் எனக் கூறப்படுகிறது. சென்னை, பெங்களூர், மைசூர் என முக்கியமான 9 நிறுத்தங்களை கொண்டுள்ளது. விரைவில் இதற்கான செயல்திட்டத்தை மத்திய அரசு தீவிரப்படுத்த உள்ளது.
திட்டத்தின் முக்கிய விபரங்கள்:
* மொத்த தூரம்: 435 கி.மீ.,
* அதிகபட்ச வேகம்: 350 கி.மீ.,
* செயல்பாட்டு வேகம்: மணிக்கு 320 கி.மீ.,
* சராசரி வேகம்: 250 கி.மீ.,
* ட்ராக் கேஜ்: ஸ்டாண்டர்ட் கேஜ் - 1435 மி.மீ.,
* சிக்னலிங்: DS-ATC
* ரயில் திறன்: 750 பயணிகள்
* இழுவை: 25 KV AC மேல்நிலை கேடனரி(OHE)
* பாதுகாப்பு: பூகம்பம் ஏற்பட்டால் தானாக நிற்கும்; நிலநடுக்கம் கண்டறிதல் மற்றும் எச்சரிக்கை அமைப்பு(யுரேடாஸ்) கொண்டது
* பாதை: சென்னை - மைசூர் எச்.எஸ்.ஆர்.,
* நிலையங்களின் எண்ணிக்கை: 9
* நிலையத்தின் பெயர்கள்: சென்னை, பூந்தமல்லி, அரக்கோணம், சித்தூர், பங்காரப்பேட்டை, பெங்களூரு, சென்னபட்னா, மாண்டியா மற்றும் மைசூரு
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu