/* */

மாணவர் வேலைவாய்ப்பு பயிற்சிக்கு ரூ.50 கோடி; வகுப்பறைகளுக்கு ரூ.18,000 கோடி

மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கும் நான் முதல்வன் திட்டத்திற்கு ரூ. 50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

மாணவர் வேலைவாய்ப்பு பயிற்சிக்கு ரூ.50 கோடி; வகுப்பறைகளுக்கு ரூ.18,000 கோடி
X

பைல் படம்.

நடப்பு 2022-23ம் நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்து, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உரையாற்றி வருகிறார். அவர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்புகள் வருமாறு:

ஆண்டுதோறும் 4 இலக்கியத் திருவிழா நடத்தப்படும் . ரூ. 5.6 கோடியில் புத்தக கண்காட்சிகள் நடத்தப்படும். அனைத்து மாவட்டங்களிலும் புத்தக காட்சிகள் நடத்தப்படும்.

அரசு கல்லூரிகள் கட்டமைப்பை மேம்படுத்த 250 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கும் நான் முதல்வன் திட்டத்திற்கு 50 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. புதிதாக 18 ஆயிரம் வகுப்பறைகள் கட்டப்படும். அதற்காக ரூ.1300 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

இளைஞர் நலன், விளையாட்டுத்துறைக்கு ரூ. 292.26 கோடி நிதி; ஒலிம்பில் போட்டி பயிற்சிக்கு ரூ. 25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவுத்துறைக்கு ரூ.13,176 கோடி ஒதுக்கீடு; பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.36,895.89 கோடி ஒதுக்கீடு செய்வதாக, பட்ஜெட் உரையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு ரூ.200 கோடி நிதி ஒதுக்கப்படும். டெல்டா மாவட்டங்களில் கடைகோடி வரை தூர்வாரும் பணிக்கு ரூ.80 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மறைந்த பேராசிரியர் அன்பழகன் பெயரில், ஆதிதிராவிடர் பள்ளிகள், கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் உள்ளிட்ட பள்ளிகளின் தரத்தை உயர்த்த புதிய திட்டம் ரூ. 7 ஆயிரம் கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.

ரூ.20 கோடி செலவில் வள்ளலார் கால்நடை பாதுகாப்பகங்கள் அமைக்கப்படும். பேரிடர் மேலாண்மை துறைக்கு பட்ஜெட்டில் ரூ.7400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 18 March 2022 1:04 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  2. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  3. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  4. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    நாங்கள் காத்துகொண்டு இருக்கிறோம் ! #annamalai #annamalaibjp ...
  7. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்
  8. பொன்னேரி
    சோழவரம் அருகே லாரி மீது தனியார் கல்லூரி பேருந்து மோதி விபத்து
  9. லைஃப்ஸ்டைல்
    அன்பு தேசத்து இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  10. கும்மிடிப்பூண்டி
    கும்மிடிப்பூண்டி: இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.2 லட்சம்