தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம்: நிதி அமைச்சர்

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம்: நிதி அமைச்சர்
X
திமுக அரசு பொறுப்பேற்றது முதல், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவதாக, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

தமிழக அரசின் 2022- 23ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். அவர் பேசியதாவது:

தமிழக அரசு, பொறுப்பேற்றது முதல் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது. ஜிஎஸ்டி வந்த பிறகு மாநில அரசின் வரி வருவாய் குறைந்துள்ளது. மத்திய அரசு நிதி வழங்காவிட்டால், ஜிஎஸ்டி வரி இழப்பு நடைமுறை முடிவுக்கு பின்னர், தமிழகம் 20 ஆயிரம் கோடி நிதி இழப்பை சந்திக்கும்.

தமிழக அரசின் நிதி பற்றாக்குறை, வரும் நிதி ஆண்இல், 4.61% இல் இருந்து 3.80% ஆக குறையும் என்று எதிர்பார்க்கிறோம். பெரியார் சிந்தனைகள் அடங்கிய நூல் தொகுப்பு, ரூ.ஐந்து கோடி மதிப்பில் 21, மொழிகளில் வெளியிடப்படும்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!